நிலவில் ரகசிய குகை கண்டுபிடிப்பு.. இனி மனிதர்கள் அங்கு சென்று தங்கவும் முடியுமாம்.. சூப்பரா இருக்கே
வாஷிங்டன்: இப்போது நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. உலக நாடுகள் சந்திரன் குறித்துப் பல வகையான ஆய்வுகளைச் செய்து வருகின்றன. இதற்கிடையே சந்திரனில் குகை இருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இந்த குகைகள் அங்கு நிலவும் மோசமான வானிலையில் இருந்து பாதுகாக்கும் என்பதால் வரும் காலத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்ய இது பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் தான் இந்த ஆய்வுகளை மேற்கொண்டன.

ஆனால், சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நிலவு குறித்த ஆய்வுகள் அப்படியே குறைந்தன. ஆனால், கடந்த சில காலமாக மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் வேகமெடுத்துள்ளன.
குகை: இதற்கிடையே நிலவின் மேற்பரப்பிற்குக் குகைக்கான வழியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த குகை 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த இடத்தில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறதாம். நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் ரேடார் அளவீடுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அதைப் பூமியில் உள்ள எரிமலைக் குழாய்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் தான் நிலவில் குகைகள் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வு குறித்த முடிவுகள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. நிலவில் பொதுவாகவே மிக மோசமான கிளைமேட் இருக்கும். வரும் காலத்தில் நிலவில் நீண்ட காலம் தங்கி மனிதர்கள் ஆய்வு செய்யும் போது அந்த மோசமான வானிலையில் இருந்து விண்வெளி வீரர்கள் தப்பிக்க இந்த குகை பெரியளவில் உதவும் என்றே ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
எப்படி உருவானது: நிலவின் ஆழமான குழியிலிருந்து இந்த குகைக்குச் செல்லலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது மேரே டிரான்குவிலிடாடிஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது. எரிமலை குழம்பால் இந்த குகை உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நிலவில் நிரந்தரமாகத் தங்கி ஆய்வு செய்யும் ஒரு ஆய்வகத்தை அமைப்பது குறித்து நாசா ஆலோசித்து வருகிறது. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் நிலவில் ஆய்வு மையத்தை உருவாக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருப்பினும், அங்கு நிலவும் மோசமான வானிலை, அண்ட கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்கினால் மட்டுமே ஆய்வாளர்களால் அங்கு நிரந்தரமாக ஆய்வு செய்ய முடியும்.
பாதுகாப்பைத் தரும்: இந்த குகை விண்வெளி வீரர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். தீங்கு விளைவிக்கும் காஸ்மிக் கதிர்கள், சூரிய கதிர்வீச்சு மற்றும் நுண்ணிய விண்கற்களில் இருந்து விண்வெளி வீரர்களை நிச்சயம் இந்த குகை பாதுகாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வரும் காலத்தில் இந்த குகை சார்ந்த ஆய்வுகள் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications