வயிற்று வலியால் துடித்த சிறுவன்..எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் 'சார்ஜிங் கேபிள்..ஷாக் ஆன மருத்துவர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: துருக்கியில் வயிற்று வலி மற்றும் வாந்தி குமட்டலால் துடித்த சிறுவனின் வயிற்றை எக்ஸ் ரே எடுத்து பார்த்ததில், மூன்று அடி நீளமான சார்ஜிங் கேபிள் அவனது வயிற்றுக்குள் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நகரம் தியார்பகர். அங்குள்ள ஒரு பகுதியில் தனது பெற்றோருடன் 15-வயது சிறுவன் ஒருவன் வசித்து வந்தான்.

சமீப காலமாக சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதேபோல் வாந்தி மற்றும் குமட்டலும் இருந்துள்ளது.

 அடிக்கடி வயிற்று வலி

அடிக்கடி வயிற்று வலி

இதனால் தனக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தி வருவதாக தனது பெற்றோருடன் கூறியிருக்கிறான். பெற்றோரும் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் வயிற்றில் வேறு ஏதேனும் கோளாறு உள்ளதா? என்பது தெரிய வரும் என்று கூறியிருக்கின்றனர்.

வயிற்றுக்குள் 3 அடி நீள சார்ஜர்

வயிற்றுக்குள் 3 அடி நீள சார்ஜர்

இதை ஏற்றுக்கொண்ட சிறுவனின் பெற்றோரும் எக்ஸ் ரே எடுக்க சம்மத்தித்தனர். இதன் படி எக்ஸ் ரே எடுத்து பார்த்ததில் சிறுவனின் வயிற்றுக்குள் மூன்று அடி நீளத்தில் சார்ஜிங் கேபிள் கிடந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சிறுவனின் வயிற்றுப்பகுதிக்குள் இருந்த சார்ஜிங் கேபிளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதன் பேரில் அருகில் உள்ள பிரட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

எப்படி வயிற்றுக்குள் சென்றது

எப்படி வயிற்றுக்குள் சென்றது

அறுவை சிகிச்சை இன்றி வயிற்றுக்குள் இருந்த கேபிளை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள் எண்டோஸ்கோபி முறையில் சார்ஜிங் கேபிளை எடுத்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சிகிச்சை நடைபெற்றது. சிறுவன் நல்ல உடல் நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். எனினும், சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட சார்ஜிங் கேபிளை சிறுவன் தவறுதலாக விழுங்கியிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் சிறுவனை மன நல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தினர்.

 ரப்பர் பேண்டுகளும் இருந்ததாக..

ரப்பர் பேண்டுகளும் இருந்ததாக..

எண்டோஸ்கோபி மூலமாக சிறுவனின் வயிற்றுக்குள் இருந்த கேபிள் அகற்றுவதில் சிக்கலான மருத்துவ நடைமுறைகள் இருந்ததாக டாக்டர்கள் கூறினர். கேபிளின் ஒரு முனை சிறு குடல் பகுதிக்குள் சென்றதால் எண்டோஸ்கோபி முறையில் அகற்றுவது மிகவும் கடினமானதாக இருந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுவனின் வயிற்றிற்குள் முடிகளை கட்டும் ரப்பர் பேண்டுகளும் இருந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 இத்தகைய அறிகுறிகள் இருந்தால்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால்

முன்னதாக கடந்த ஆண்டு துருக்கியில் காந்ததுண்டுகளை குழந்தை ஒன்று விழுங்கியிருந்தது. அதையடுத்து, அறுவை சிகிச்சை மூலமாக இந்த காந்தத்துண்டுகளை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். மனநல பாதிப்புகளால் சிலர் இதுபோன்ற பொருட்களை விழுங்கும் வினோத பழக்கங்களை கொண்டு இருப்பதாகவும்.. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+