"மொத்தம் 9 பறக்கும் தட்டுகள்.." சத்தமின்றி மீட்ட அமெரிக்காவின் சீக்ரெட் டீம்.. எங்கிருந்து தெரியுமா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஏஐ ஏலியன்களை நடமாட்டத்தை உறுதி செய்ய ஆய்வு நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சில பரபர தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் இந்த உலகைத் தாண்டி பல்வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அப்படி வேற்று கிரகங்களில் இருக்கும் உயிரினங்கள் ஏற்கனவே பூமிக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் பறக்கும் தட்டுகளைப் பயன்படுத்தி பூமிக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி பறக்கும் தட்டுகள் எனப்படும் இந்த யுஎப்ஓக்கள் குறித்துக் கண்டறிய அமெரிக்கா பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
ஆய்வு: அமெரிக்கா இது குறித்து ஆய்வு செய்யச் சிறப்புக் குழுக்களையும் கூட அமைத்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு இந்த யுஎப்ஓக்கள் குறித்து ஆய்வு செய்ய ஓஜிஏ எனப்படும் ஒரு ரகசியப் பிரிவைக் கொண்டுள்ளது. அந்த சீக்ரெட் பிரிவு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விபத்துக்குள்ளான யுஎப்ஒக்களை மீட்டுள்ளதாக டெய்லி மெயில் என்ற சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகெங்கும் இருந்து குறைந்தபட்சம் இதுபோல 9 யுஎப்ஓக்களை இந்த அமைப்பு மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிஐஏ அமைப்பில் இருக்கும் பல நபர்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதில் சில யுஎப்ஒக்கள் விபத்துகளால் சேதமடைந்தாலும், இரண்டு பறக்கும் தட்டுகள் அப்படியே இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது,.
யுஎப்ஓ: Office of Global Access என்ற இந்த அமைப்பு சிஏஐ கீழ் இயங்கி வருகிறது. 2003இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், அவர்கள் யுஎப்ஓக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். யுஎப்ஓக்களை மீட்கும் பணிகளில் நேரடியாக ஈடுபட்ட இருவர் இது குறித்து விளக்கியதாகவும் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர்களில் ஒருவர் கூறுகையில், "அமெரிக்க உளவுத்துறை ஒரு சிறப்பு சிஸ்டம் இருக்கிறது. யுஎப்ஓக்கள் எங்காவது விழுந்தால் அதை அந்த அமைப்பு உடனடியாக கண்டுபிடித்துவிடும். உடனடியாக அதை மீட்க ஸ்பெஷல் மில்லடரி அனுப்பப்படுவார்கள்" என்றார். இது குறித்த தகவல்களை அமெரிக்கா வெளிப்படையாக அறிவிப்பதில்லை. அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்புக் குழுவான SEAL குழுவுடன் இணைந்து ஓஎப்ஓக்கள் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படுமாம்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவிடம் யுஎப்ஓக்கள் இருப்பதாகவும் ஏலியன் குறித்த ஆய்வுகளில் அமெரிக்காவிடம் பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்து கொண்டு இருந்தது. அந்தத் தகவல்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பகீர் தகவல்: முன்னதாக கடந்த ஜூலை மாதம் செனட் உறுப்பினர் சக் ஷுமர் என்பவர் மீட்கப்பட்ட யுஎப்ஓக்கள் குறித்து வெளிப்படையாகத் தகவல்களைப் பகிர அரசை நிர்ப்பந்தம் செய்யும் வகையில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். அதே மாதம் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ் என்பவர் ஏலியன் உடல்களை அமெரிக்கா வைத்துள்ளது குறித்த ஆதாரத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறி அதிர வைத்தார்.
இந்த டேவிட் க்ரூஷ் அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்தவர். மேலும், அந்நாட்டின் தேசிய புவிசார் புலனாய்வு நிறுவனம் உள்ளிட்ட உளவு நிறுவனங்களிலும் பணியாற்றியவர். கடந்த மாதம் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், இது தொடர்பாக மேலும் சில தகவல்களைப் பகிர்ந்தார். அதாவது விபத்துக்குள்ளான யுஓப்ஓக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல ஏலியன் உடல்களை அமெரிக்கா மீட்டுள்ளதாகக் கூறி பகீர் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications