பூமியை நோக்கி வரும் சிட்டி கில்லர் விண்கல்.. மும்பை மீது விழ வாய்ப்பு.. விஞ்ஞானிகள் சொன்ன பகீர்!
வாஷிங்டன்: சிட்டி கில்லர் என்ற விண்கல் 2024 YR4 பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு ஆசியா வரை விழலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பகோடா, கொலம்பியா, லாகோஸ், நைஜீரியா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் விழ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் மனிதன் கற்பனைக்கும் எட்டாத பல விசித்திரங்கள் உள்ளன. இந்த சூரிய குடும்பத்தில் சூரியனை எப்படி பூமி உள்பட கோள்கள் சுற்றி வருகிறதோ அதேபோல எண்னற்ற விண்கற்களும் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் அளவில் சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு அளவுகளில் சுற்றி வருகின்றன.

"சிட்டி கில்லர்" விண்கல்
இந்த விண்கற்கள் எப்போதாவது பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமி மீது மோதவும் செய்கின்றன. பெரும்பாலான விண்கற்கள் வளி மண்டலத்திற்குள் நுழையும் போது எரிந்து சாம்பலாகிவிடும். அரிதாக சில விண்கற்கள் பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. விண்கற்கள் குறித்த ஆய்வில் நாசாவில் பெரிய விஞ்ஞானிகள் குழுவே ஈடுபட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகள் அண்மையில் விண்கல் 2024 YR4 என்பதை கண்டறிந்தனர். இந்த விண்கல் நகரத்தை அழிக்க கூடியது என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது சிட்டி கில்லர் என்ற பெயரும் இதற்கு உள்ளது. இந்த விண்கல் பூமியை நெருக்கமாக வரும் டிசம்பர் 22- 2032 ஆம் ஆண்டு கடந்து செல்கிறது. அப்போது இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 1.5 சதவிகித வாய்ப்பு இருக்கிறது.

பூமியில் எந்த இடத்தில் மோத வாய்ப்பு
அதாவது 67ல் ஒரு மடங்கு மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சதவித்திற்கும் மேலான வாய்ப்பு இருப்பதால், நாசா மட்டும் இன்றி சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் இந்த விண்கல் செல்லும் பாதை குறித்து தீவிரமாக ஆய்வு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விண்கல் ஒருவேளை பூமியின் மீது விழுந்தால் எந்த இடத்தில் மோத வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கணித்துள்ளனர்.
கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு ஆசியா வரை விழலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் மக்கள் அதிகம் வசிக்கு பகுதிகளாக உள்ளன. அதாவது பகோடா, கொலம்பியா, லாகோஸ், நைஜீரியா மற்றும் மும்பை ஆகிய இடங்கள் இதற்குள் வருகின்றன.
நிலவு மீது மோத வாய்ப்பு?
இந்த விண்கல் பூமியின் துணைக்கோளான நிலவு மீது மோதவும் வாய்ப்பு உள்ளது. 130 முதல் 300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மிகப்பெரிய கட்டிடத்தின் அளவை விட பெரிதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். உடனடி பாதிப்பு என்றால் ஹைட்ரஜன் வெடிகுண்டு வெடித்தது போல ஒரு பெரிய பேரழிவு அந்த பகுதியில் ஏற்படும்.
தீவிரமாக கண்காணிக்கும் விஞ்ஞானிகள் குழு
எனினும் இந்த விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் என்பது, நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. இது பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்பு "ஜீரோ"வாக கூட குறையலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது, அடுத்த சில ஆண்டுகளில் இந்த வாய்ப்பு குறைந்து ஜீரோ வாக மாறும் என்றும் நியூயார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இந்த விண்கல்லை உன்னிப்பாக நாசா விஞ்ஞானிகள் குழு கண்காணித்து வருகிறது. சீனா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து கண்காணித்து வருகிறது. நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் தொலை நோக்கி கொண்டும் ஒரு விஞ்ஞானிகள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications