ஒரே நாளில் கொத்து கொத்தாக மக்களை கொன்ற கொரோனா.. அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, பிரேசிலில் பகீர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 22லட்சத்து 27 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 450,381 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,889 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதேபோல் மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ உள்பட பல்வேற மேற்கத்திய நாடுகள் தவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முற்றிலும் குறைந்துவிட்டதாக கருதப்பட்டு இயல்புநிலைக்கு மக்கள் திரும்பி இருந்தனர். ஆனால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து கொத்து கொத்தாக உயிர்களை கொன்று வருகிறது கொரோனா.. தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இங்கிலாந்தில் கூட நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது தான் வேதனைக்கு உரிய உண்மை.

எவ்வளவு

எவ்வளவு

உலகில் கொரோனா தொற்றால் 10,31,02,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 22,27,675 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 747,34,625 பேர் மீண்டுள்ளனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2,61,35,986 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்

இந்தியா 2வது இடம்

இந்தியா 2வது இடம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2,66,52,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,07,47,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 9,176,975 பேரும், ரஷ்யாவில் 38,32,080 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 3,796,088 பேரும், பிரான்சில் 31,77,879 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் பாதிப்பு

ஒரு நாள் பாதிப்பு

ஒரு நாள் பாதிப்பு என்று பார்த்தால், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 137,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பிரேசிலில் 57,498 பேரும், பிரான்சில் 24,392 பேரும், இங்கிலாந்தில் 23,275 பேரும் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் 19,032 பேரும், மெக்ஸிகோவில் 16,374 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் 13,065 பேர் பாதிக்கப்பட்டனர்.

மெக்ஸிகோவில் உயரும் பலி

மெக்ஸிகோவில் உயரும் பலி

ஒரே நாளில் அதிக உயிரிழப்பு என்று பார்த்தால் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,889 பேர் மரணம் அடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் 1434 பேரும், இங்கிலாந்தில் 1200 பேரும் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 1196 பேரும், ரஷ்யாவில் 512 பேரும், ஜெர்மனியில் 460 பேரும் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் 421 பேரும், கொலம்பியாவில் 366 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+