அமெரிக்காவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 2,050 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,46,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,46,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 23,70,44,824 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட நிலையில் அங்கு ஒரே நாளில் 2,050 பேர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 23 கோடி பேர் சிக்கியுள்ளனர். 48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரியும் கொரோனாவால் பலரும் பாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 4,80,876 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21,41,82,651 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 8,055 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48,39,300 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டது. அங்கு ஒரே நாளில் 105,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,49,12,781 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 2,050 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 3,43,84,798 பேர் மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 22,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 24,624 பேர் மீண்டுள்ளனர். 315 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 18,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,15,17,514 பேராக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 39,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 8,006,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 65,28,673 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனாவால் ஒரே நாளில் 25,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 76,62,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,841 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 929 பேர் மரணமடைந்துள்ளனர்












Click it and Unblock the Notifications