கொரோனா தடுப்பூசியால் 60,000 உயிரிழப்பு? "வேக்சின் போட்டபோது என்ன ஆச்சு தெரியுமா" எலான் மஸ்க் சர்ச்சை
வாஷிங்டன்: உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது தடுப்பூசிகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தடுப்பூசி குறித்து இணையத்தில் பல சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிலர் கொரோனா தடுப்பூசி குறித்து ஆதாரமில்லாத தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அந்த லிஸ்டில் எலான் மஸ்கும் சேர்ந்துள்ளார். கொரோனாவால் 60,000 பேர் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததும், ஆக்சிஜனுக்காக மக்கள் அலைந்ததும் நமக்குத் தெரியும். அந்தச் சூழலில், மிகக் குறுகிய காலத்தில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் தான் உலகளவில் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியது. சரியான நேரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வேக்சின்கள் உயிரிழப்பை மிகப் பெரியளவில் குறைத்தது.

வல்லுநர்கள்
இதற்கிடையே தடுப்பூசிகள் குறித்து ஒரு நச்சுயியல் நிபுணர் வைத்துள்ள குற்றச்சாட்டு விவாதமாகியுள்ளது. எலான் மஸ்க் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, "எனக்கு இரண்டாவது டோஸ் போட்டபோது நான் சாகப்போவது போலவே உணர்ந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குச் சென்றேன்" என்று பதிவிட்டிருந்தார். அவர் பகிர்ந்த அந்த 5 நிமிட வீடியோவில் இருப்பவர் டாக்டர் ஹெல்முட் ஸ்டெர்ஸ் (Dr. Helmut Sterz).
ஹெல்முட் ஸ்டெர்ஸ், கொரோனாவுக்கு வேக்சின் கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனங்களில் ஒன்றான ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவில் நச்சுயியல் பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தவர். 2007ம் ஆண்டிலேயே, அதாவது கொரோனா தடுப்பூசிகள் உருவாவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும், ஃபைசர் நிறுவனம் எம்ஆர்என்ஏ (mRNA) தொழில்நுட்பம் மூலம் வேக்சின் உருவாக்கிய நிலையில், அது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார்.
குற்றச்சாட்டு
ஜெர்மனி நாடாளுமன்றக் குழுவின் முன்பு ஆஜராகி அவர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ஃபைசர் தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய 10 முக்கியமான பாதுகாப்பு ஆய்வுகள் தவிர்க்கப்பட்டன. மேலும், புற்றுநோயை உண்டாக்குமா என்பதற்கான (Carcinogenicity) ஆய்வுகள் முறையாகச் செய்யப்படவில்லை. ஜெர்மனியில் தடுப்பூசி போட்ட பிறகு சுமார் 2,133 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதை ஒரு அமெரிக்கக் கணக்கீட்டின்படி 30ஆல் பெருக்கினால், 60,000 மரணங்கள் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கலாம் என ஒரு பகீர் தகவலை வெளியிட்டார்.
விளக்கம்
அதேநேரம் ஸ்டெர்ஸின் இந்தக் கணக்கீட்டை ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் கார்ல் லூட்டர்பாக் உட்படப் பல விஞ்ஞானிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும், ஆய்வாளர்களும் ஸ்டெர்ஸ் கருத்துகளில் முழு உண்மை இல்லை என்கிறார்கள். முதலில் தடுப்பூசி போட்ட பிறகு ஒருவர் இறந்துவிட்டால், அது அப்படியே பதிவு செய்யப்படும். ஆனால், அந்த மரணத்திற்குத் தடுப்பூசிதான் காரணம் என்பதை உறுதி செய்ய முறையான பிரேதப் பரிசோதனையும் ஆய்வும் தேவை. 2,133 மரணங்களும் தடுப்பூசியால் வந்தவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆதாரம் இல்லை
அமெரிக்காவின் தரவுகளை வைத்து, வெறுமன 30ஆல் பெருக்குவது என்பது அறிவியல் ரீதியாகத் தவறான அணுகுமுறை என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், தடுப்பூசி தொடர்பாக 10 கோடிக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வேக்சினால் இதயத் தசை அழற்சி (Myocarditis) வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் அதேநேரம் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம் என்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வு உறுதி செய்துள்ளது.
ஹெல்முட் ஸ்டெர்ஸ் முன்வைக்கும் இந்த வாதங்கள் எந்தவொரு அறிவியல் இதழிலும் வெளியாகவில்லை என்ற போதிலும் அவரது பேச்சை எலான் மஸ்க் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளதால் அது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications