உலகளவில் போட்டுத் தாக்கும் கொரோனா.. ஆறுதல் தரும் இந்தியா.. ஆனா 'அது' மட்டும் குறையல
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 154,165,720 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை பாதித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,226,583 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் உயிரிழப்புகள் தொடருகின்றன. ஆனால், அனைத்துக்கும் உச்சமாக உள்ள நாடு இந்தியா தான்.

ஒரே நாளில்
உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 154,165,720 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 131,545,776 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 38,514 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 443 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து ஓகே
அதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 36,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்தில் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அங்கு, 1,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிரான்சில் 3,760 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு ஒரேநாளில் 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

இத்தாலி மோசம்
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,31,744 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 311 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இத்தாலியில் 5,948 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 256 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

குறையும் எண்ணிக்கை
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக சற்று ஆறுதல் தரும் வகையில், கொரோனா எண்ணிக்கை உள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு 4.01 லட்சம் என்றிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஷாக் தரும் செய்தி என்னவெனில், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications