உலகின் பயங்கரம் கொரோனா.. அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்தில் கொத்துக்கொத்தாய் செத்து மடியும் மக்கள்!
வாஷிங்டன்: அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. மக்கள் கொத்துக்கொத்தாக மரணம் அடைந்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த நாடுகள் தவித்து வருகின்றன.
சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனாவிற்கு 2021ம் ஆண்டிலும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. உலக அளவில் கொரோனா தொற்றால் 10 கோடியே 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 23லட்சத்து 63 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 7 கோடியே 9லட்சத்து 84 ஆயிரம் பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 25,481,675 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எங்கு பாதிப்பு அதிகம்
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் 27,896,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,871,060 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 9,662,305 பேரும், ரஷ்யாவில் 4,012,710 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 3,985,161 பேரும், பிரான்சில் 3,385,622 பேரும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகள்
ஒரு நாள் பாதிப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் ஒரே நாளில் 96,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 60,271, பிரான்சில் 25,387, ஸ்பெயினில் 18,114 பேரும் ஒரு நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 14,494 பேருக்கும், இங்கிலாந்தில் 13,013 பேருக்கும் கொரோனா ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் 12,956 பேருக்கும், இந்தியாவில் ஒரே நாளில் 12,760 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

அதிக மரணம்
ஒரு நாள் உயிரிழப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 3,397 பேர் மரணம் அடைந்தனர். மெக்ஸிகோவில் 1,701 பேரும், பிரேசிலில் 1,357 பேரும் ஒரே நாளில் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் 1001 பேரும், ஜெர்மனியில் 708 பேரும் கொரோனாவால் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

பிரேசில்
ஒட்டுமொத்தமாக இதுவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் 483,165 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 234,945 பேரும், மெக்ஸிகோவில் 168,432 பேரும் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 155,399 பேரும், இங்கிலாந்தில் 114,851 பேரும், இத்தாலியில் 92,338 பேரும், பிரான்சில் 80,443 பேரும், ரஷ்யாவில் 78,134 பேரும், ஜெர்மனியில் 63,979 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications