உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 18,00,30,754 பேர் மீண்டனர் - 20 கோடி பேரை நெருங்கும் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,74,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,04,790 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,00,30,754 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,74,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,95,60,514 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதலே உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறி பல பெயர்களோடு தற்போது பரவி வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் பலரையும் வைரஸ் தொட்டு விட்டுதான் செல்கிறது.

Covid 19 Update: Corona 18,00,30,754 people Recovered in worldwide

கொரோனா பரவல் சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் தீயாகப் பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தினாலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்றே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 4,04,790 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,00,30,754 பேராக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்து ஒரே நாளில் 7,649 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 42,48,023 பேராக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 1,52,81,737 பேர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 91,641 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,369 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 3,58,95,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 2,97,17,537 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதித்து மொத்தம் 6,29,862 பேர் மரணமடைந்துள்ளனர்

பிரேசில் நாட்டில் கொரோனாவால் 15,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,53,501 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 1,86,87,203 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 473 பேர் மரணமடைந்துள்ளர். கொரோனா பாதித்து நாட்டில் 5,57,359 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 30,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 3,17,25,399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 3,08,88,702 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 420 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் மொத்தம் 4,25,228 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வந்தாலும் டெல்டா, கப்பா, டெல்டா பிளஸ், ஆல்பா, பீட்டா, காமா என பலவிதமாக உருமாறி வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு எப்போது உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+