சோவியத் வீரர்களை கல்லாக மாற்றிய ஏலியன்! நொடியில் அரங்கேறிய தாக்குதல்! சிஐஏ ரகசிய ஆணவத்தில் தகவல்
வாஷிங்டன்: பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ஒன்றிய வீரர்களுக்கு ஏலியன்கள் உடன் மோதல் ஏற்பட்டதாக சிஐஏ டாக்குமெண்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஏலியன்கள் திரும்பத் தாக்கியதில் அந்த வீரர்கள் அனைவரும் அப்படியே கல்லைப் போல மாறியதாகவும் அந்த உளவு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ அவ்வப்போது பழைய சீக்ரெட் உளவு ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிடும். அதாவது இனிமேல் இந்த ஆவணங்களை வெளியிடுவதால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு சீக்ரெட் ஆவணங்களை சிஐஏ அமைப்பு வெளியிடும். அதன்படி சில காலம் முன்பு புதிதாக சில டாக்குமெண்டுகளை அமெரிக்கா வெளியிட்டது. அதுவே இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சோவியத் வீரர்கள்
அதாவது உக்ரைன் பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் வீரர்கள் யுஎஃப்ஒ ஒன்றைச் சந்தித்தாக அதில் கூறப்பட்டுள்ளது. பனிப்போர் காலகட்டத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதலில் இந்த ஆவணம் 2000ஆம் ஆண்டில் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. ஆனால், அது இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்த டாக்குமெண்டின்படி சோவியத் வீரர்கள் உக்ரைன் பகுதியில் பறக்கும் தட்டை பார்த்துள்ளனர். சோவியத் வீரர்களுக்கு உக்ரைன் நாட்டில் என்ன வேலை என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். சோவியத் ஒன்றியம் இருந்தவரை அதன் ஒரு பகுதியாகவே உக்ரைன் இருந்தது. சோவியத் வீழ்ந்த பிறகே ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன. அது தனிக்கதை.
ஏலியன்கள் கொடுத்த பதிலடி
அந்த சோவியத் வீரர்கள் பறக்கும் தட்டு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், ஏலியன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் அஞ்சிய சோவியத் வீரர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற நிலையில், அப்போது 23 வீரர்களும் திடீரென கல்லாக மாற்றியதாகக் கூறப்படுகிறது. 1991இல் சோவியத் யூனியன் சரிந்த பிறகு நடந்த அமெரிக்காவுக்கு இது குறித்த 250 பக்க ரஷ்ய உளவு படையின் ஆவணம் கிடைத்துள்ளது. அதில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சம்பவம் முடிந்த பிறகு அங்கு நேரில் சென்றவர்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள் இருந்துள்ளன.
மோசமான பழிவாங்கல்
வேற்று கிரகவாசிகளின் தாக்குதலைத் தொடர்ந்து வீரர்களின் உயிருள்ள செல்கள் சுண்ணாம்புக் கல் போன்ற மாறியதாக அதில் கூறப்பட்டுள்ளது. வேற்று கிரகவாசியின் பயங்கரமான பழிவாங்கல் என அந்தச் சம்பவத்தைச் சோவியத் வீரர் ஒருவர் குறிப்பிடுகிறார். வேற்று கிரகவாசிகள் குறித்து அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த டாக்குமெண்டு வெளியிடப்பட்டுள்ளது.
பகீர் சம்பவம்
உக்ரைனில் இருந்த சோவியத் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது சாஸர் வடிவத்தில் தாழ்வாகப் பறக்கும் விண்கலத்தை கண்டனர். வீரர்களில் ஒருவர் ஏவுகணை மூலம் அந்த பறக்கும் தட்டை தாக்கியிருக்கிறார். அது தரையிறங்கிய பிறகே நிலைமை மோசமடைந்தது. பூமியில் அந்த பறக்கும் தட்டு விழுந்த பிறகு, அதிலிருந்து பெரிய தலைகள் மற்றும் பெரிய கருப்பு கண்கள் கொண்ட ஐந்து குட்டையான மனித உருவங்கள் வெளியே வந்தன. பிறகு அந்த ஐந்து உயிரினங்கள் ஒன்றாக இணைந்து பெரிய உருவமாக மாறியதாம்.
பிறகு இது இன்னும் பெரிதாக வளர்ந்து பிரகாசமான ஒளியுடன் வெடித்துச் சிதறியது. அதைப் பார்த்த 23 வீரர்கள் அப்படியே கல்லாக மாறிப் போனார்கள். இந்த சம்பவம் நடந்தபோது வெகு தூரத்தில் இருந்த இரு வீரர்கள் மட்டுமே தப்பிப் பிழைத்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications