நியூக் டெஸ்ட்! நிலவையும் விட்டுவைக்காத அமெரிக்கா.. அணு ஆயுத சோதனை செய்ய சீக்ரெட் திட்டம்?பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா நிலவில் மேற்கொள்ள இருந்த சில முக்கிய ஆய்வுகள் குறித்த ரகசிய ஆவணம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல ஆண்டுகளாகவே நிலவு குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது, செயற்கோளை அனுப்புவது போன்ற ஆய்வுப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
நிலவில் நீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகச் சமீப ஆண்டுகளாக இதுபோன்ற ஆய்வுகளில் உலக நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.

அமெரிக்கா
இந்நிலையில், நிலவில் அமெரிக்கா செய்யத் திட்டமிட்டிருந்த ஆய்வுகள் குறித்த சில முக்கிய தகவல்களே வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 2007 முதல் 2012 வரை செயல்பாட்டில் இருந்த அமெரிக்க அரசின் மேம்பட்ட விண்வெளி அச்சுறுத்தல் அடையாள திட்டத்தின் (US government's Advanced Aerospace Threat Identification Program) ரகசிய ஆவணங்களின் ஒரு பகுதி, தற்போது வெளியாகி உள்ளது. இந்த அமைப்பு நிலவில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக்கிய சோதனைகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது அதில் தெளிவாகத் தெரிகிறது.

அணு ஆயுத சோதனை
கண்ணுக்குத் தெரியாத ஆடைகள், புவியீர்ப்பு எதிரான கருவிகள், வார்ம் ஹோல்கள் ஆகியவை குறித்து சோதனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பாக நிலவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி சுரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதில் உள்ள எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரகசிய அமைப்பு
மொத்தம் 1600 பக்கங்களைக் கொண்ட இந்த ஆணவம், ஏ.ஏ.டி.ஐ.பி. போட்டிருந்த திட்டத்தின் அளவை காட்டும் வகையில் உள்ளது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் வரை ரகசிய அமைப்பாகச் செயல்பட்டு வந்தது. அந்த அமைப்பின் அப்போதைய இயக்குநர் ராஜினாமா செய்த போது தான் இதுபோன்ற ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டு வருவதே தெரிய வந்தது. இந்த ரகசிய அமைப்பிற்கு அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் நிதி அளித்து வந்தது. இது ஏலியன் தொடர்பான ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சலசலப்பு
கண்ணுக்குத் தெரியாத பொருட்கள், வார்ம்ஹோல்கள், எதிர்மறை ஆற்றல், புவியீர்ப்பு எதிர்ப்பு கருவிகள் ஆகியவற்றை கொண்டு மேம்பட்ட அதிநவீன ராணுவ ஆயுதங்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் தீவிர சோதனை நடத்தியது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் நிலவு ஆய்வு திட்டமான அப்பல்லோவை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ரகசிய ஆவணங்களின் தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பலரும் நிலவில் திட்டமிடப்பட்டு இருந்த அணு வெடிப்பு திட்டம் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Recommended Video

ஏலியன் ஆய்வு
அமெரிக்காவின் தி சன் செய்தி நிறுவனம் இந்த ஏ.ஏ.டி.ஐ.பி. அமைப்பு திட்டமிட்டிருந்த ஆய்வுகள் குறித்த செய்திகளை வெளியிட்ட போது அது பெரும் சர்ச்சையானது. ஏலியன்கள் மற்றும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, ஏற்படும் உயிரியல் விளைவுகளைக் குறித்தும் இந்த அமைப்பு ஆய்வு செய்திருந்தது. அதுபோன்ற நேரங்களில் ஏற்படும் பாதிப்புகளைப் பதிவு செய்யும் வகையிலேயே அந்த திட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. இது பெரியளவில் சர்ச்சையான நிலையில் 2012இல் இந்த அமைப்பு மூடப்பட்டது.












Click it and Unblock the Notifications