டிரம்ப்பை தோட்டா உண்மையில் தாக்கியதா? எஃப்.பி.ஐ இயக்குநர் பகீர்.. அப்போ ரத்தம் எல்லாம் பொய்யா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் அவர் நூலிழையில் தப்பித்தார். இதற்கிடையே அவர் மீது நடத்தப்பட்ட இந்த கொலை முயற்சி தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஜூலை 13ம் தேதி அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

டிரம்ப் கொலை முயற்சி: மேடையில் கடைசி நேரத்தில் டிரம்ப் தலையைத் திருப்பியதே அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. ஆனால், அந்த தோட்டா டிரம்பை உண்மையில் தாக்கியதா? இது ஏதோ நெட்டிசன்கள் கிளப்பிவிடும் வதந்தி இல்லை.. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே நிஜமாகவே இது குறித்து சந்தேகம் கிளப்பி இருக்கிறார். அவர் அமெரிக்க ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டி முன் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்கும் போது இந்த சந்தேகத்தை எழுப்பினார்.
சந்தேகம்: அதாவது டிரம்பை தாக்கியது துப்பாக்கி தோட்டா தானா அல்லது துப்பாக்கிச் சூட்டின் போது சிதறிய ஒரு சிறிய பகுதியா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்பதே எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரேவின் சந்தேகமாக இருக்கிறது.
டிரம்ப் துப்பாக்கிச் சூடு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், வ்ரே இந்தச் சம்பவம் குறித்து மேலும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "முன்னாள் அதிபர் டிரம்பை பொறுத்தவரை, அவரது காதில் பட்டது தோட்டா அல்லது சிதறலின் துண்டுகளா என்பது குறித்து சில கேள்விகள் உள்ளன. அந்த தோட்டா டிரம்பை உரசி சென்றதா.. வேறு எங்காவது பாய்ந்ததா என நமக்கு தெரியாது.. அது தோட்டா இப்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை" என்றார்.
குளறுபடிகள்: மேலும், டிரம்ப் பேரணியில் நடந்த பாதுகாப்பு குளறுபடிகள் குறித்தும் அவர் விளக்கினார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய தாமஸ் மேத்யூ சந்தேகத்திற்கிடமான நபராக அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர் பேரணியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தாமஸ் தனது துப்பாக்கியை மடித்து ஆடைக்குள் மறைத்து பேரணி நடக்கும் இடத்திற்கு எடுத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த மேற்கூரையில் ஏறிய தாமஸ் சரியாக டிரம்பை நோக்கிச் சுடத் தேவையான உபகரணங்களையும் எடுத்தே சென்றதாகவும் எஃப்.பி.ஐ இயக்குநர் வ்ரே தெரிவித்துள்ளார். தாமஸ் மொத்தம் எட்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின்னரே சீக்ரெட் சர்வீஸ் வீரர் தாமஸை சுட்டுக் கொன்றுள்ளனர்.
மனநிலை என்ன: துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் அதற்கு முன்பு 1963இல் அரங்கேறிய ஜான் எஃப். கென்னடி படுகொலை குறித்து கூகுள் செய்து பார்த்துள்ளார். கென்னடி எவ்வளவு தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தாமஸ் கூகுள் செய்து பார்த்து இருக்கிறார். இதை அமெரிக்க ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியிடம் குறிப்பிட்ட எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, இது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் டிரம்ப் மீது பட்டது தோட்டாவா இல்லை சிறு துண்டா என்பது பெரிய விவாதம் இல்லை. ரத்தம் வழிய டிரம்ப் இருக்கும் போட்டோ இணையத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது டிரம்பின் பிரச்சாரத்திற்கு மிகப் பெரிய பூஸ்டை கொடுத்துள்ளதாகவே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் வரும் நவ. 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications