பெர்முடா முக்கோணத்தை விடுங்க.. டைட்டானிக் டூ பல மர்மங்கள்! அட்லாண்டிக் கடலில் புதைந்துள்ள ரகசியம்
வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடல் குறித்து பிரமிக்க வைக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
அட்லாண்டிக் கடலை சுற்றி புளோரிடா மாகாணம் உள்ளது. உலகிலேயே பசிபிக் பெருங்கடலுக்கு அடுத்த இரண்டாவது பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்தான். அட்லாண்டிக் பெருங்கடல் 47 மில்லியன் சதுர மைல்கள் கொண்டது.

அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவை துல்லியமாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவின் மொத்த பரப்பளவில் ஆறரை மடங்கை காட்டிலும் அதிகமானதை அட்லாண்டிக் கடலில் வைத்தால் கொள்ளும். அந்த அளவுக்கு பெரியது. உலகின் மொத்த பரப்பளவில் அட்லாண்டிக் கடல் 20 சதவீதம் ஆகும்.
அட்லாண்டிக் பெருங்கடல் மிகவும் ஆழமானது. அந்த கடலில் மிகவும் ஆழமான பகுதியின் பெயர் மில்வாக்கி ஆகும். இது பூர்டோ ரிகோ பகுதியில் அமைந்துள்ளது. இதனால் ஆழம் சராசரியாக 10,955 அடியாகும். அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையை பெருமளவுக்கு பங்கிட்டிருப்பது புளோரிடாதான்.
புளோரிடாவில் உள்ள புதிய மைர்னா கடற்கரை உலகின் சுறா மீன்கள் தாக்கும் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 முதல் 3 மணிக்கு மேல் புளோரிடாவில் சுறா தாக்கிய சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. இந்த பகுதியில் 139 சுறா தாக்குதல்கள் நடந்த நிலையில் 27 தாக்குதல்கள் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடந்ததாகும்.
சுறாக்கள் தாக்கினால் காயமோ பலியோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அட்லாண்டிக் என்பது பழைய பெயர். இதற்கு அர்த்தம் அட்லஸ் கடல் ஆகும். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது பெர்முடா முக்கோணம். இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்கள், இந்த பகுதியின் அருகே செல்லும் கப்பல்கள் மாயமாகி வருகிறது. சுமார் 70 ஆண்டுகளாக இந்த மர்மத்திற்கு காரணம் தெரியவில்லை.
7 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டது இந்த பெர்முடா முக்கோணம். இதன் ஒரு முனை அமெரிக்காவின் புளோரிடாவையும் அடுத்த முனை பூர்டோ ரிகோவையும் ஒரு முனை பெர்முடாவையும் இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட முக்கோண பகுதியின் பரப்புக்கு மேல் செல்லும் பொருட்கள் மாயமாகிவிடுவதாக சொல்லப்படுகிறது. இதன் மேலே செல்லும் பறவைகள் கூட காணாமல் போய்விடுகிறதாம்.
அது போல் இந்த பகுதியில் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர். இந்த முக்கோணத்தை சாத்தான் முக்கோணம் என்றும் அழைக்கிறார்கள். மேலும் வேற்றுகிரகவாசிகளான ஏலியன்கள் அந்த முக்கோணத்தில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி மர்மங்கள் நிறைந்த அட்லாண்டிக் பெருங்கடலில்தான் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கி கிடக்கிறது. மேலும் அந்த டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலும் வெடித்து சிதறி, அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகிவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications