“வரி விஷயத்தில் இந்தியா எங்களை கொல்கிறது!” அப்படியே மாற்றி உருட்டும் டிரம்ப்.. எதுக்கு இந்த சீனு?
வாஷிங்டன்: அமெரிக்கா விதித்துள்ள 50% வரி காரணமாக திருப்பூர், கோவையில் தொழில்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இந்நிலையில், இறக்குமதி வரி விஷயத்தில் இந்தியா எங்களை கொல்கிறது என டிரம்ப் முதலை கண்ணீர் வடித்திருக்கிறார்.
"சீனா, இந்தியா, பிரேசில் எங்களைக் கொல்கிறது. எனது வரிக் கொள்கைகளால், அமெரிக்கா மீதான தாக்குதல்கள் குறைகின்றன. இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக இருந்தது. இப்போது அவர்கள் வரி இல்லை என்று கூறியுள்ளனர்.

நான் வரிகளை விதிக்கவில்லை என்றால், அவர்கள் ஒருபோதும் அந்த சலுகையை வழங்கியிருக்க மாட்டார்கள். எனவே, வரிகள் அவசியம். நாம் பொருளாதார ரீதியாக வலிமையாக இருப்போம். அவர்கள் இனி எங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது" என்று தி ஸ்காட் ஜென்னிங்ஸ் வானொலி நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. டிரம்ப் போட்டிருக்கும் வரி, பொருட்களை கொண்டதாக அல்ல, மாறாக நாடுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. அதாவது வியட்நாமிலிருந்து ஜவுளி இறக்குமதி செய்தால் 17%, வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்தால் 19%, அதே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தால் 50% வரி. தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 16% வரியை டிரம்ப் போட்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று சொல்லி வரியை 25% ஆக உயர்த்தினார். தற்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறோம் என்று சொல்லி 50% ஆக வரியை உயர்த்தியுள்ளார்.
இதனால் அமெரிக்காவுடனான ரூ. 7.2 லட்சம் கோடி ஏற்றுமதி வணிகத்தில் 50% அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரிலிருந்து ஆண்டுக்கு ரூ.12-15 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும். ஆனால் வரி உயர்வு காரணமாக ரூ.1,500 கோடி அளவுக்கான பொருட்கள் தற்போது தேக்கமடைந்திருக்கின்றன. அமெரிக்க சந்தைக்கு சுமார் 40% அளவுக்கு திருப்பூரிலிருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்போது வரி காரணமாக இது தடைப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
சூழல் இப்படி இருக்கையில், இந்தியா அமெரிக்காவை கொல்கிறது என்று டிரம்ப் உருட்டியிருக்கிறார். ஆனால் இந்தியா விடாப்பிடியாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவை சமாளிக்க முடியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications