கமலா ஹாரிஸை பார்த்து பயப்படும் டொனால்ட் டிரம்ப்.. அமெரிக்காவின் அரசியலே மாறப்போகுது - பராக் ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் ஜனநாயக கட்சியின் 2 நாள் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசும்போது, ‛‛கமலா ஹாரிஸை பார்த்து டொனால்ட் டிரம்ப் பயந்துபோய் உள்ளார். அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் மற்றும் தெற்கு ஆசியாவை சேர்ந்த பெண் அதிபராக கமலா ஹாரிஸ் வருவார்'' என்று பேசினார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ள நிலையில் அவருக்கு ஜனநாயக கட்சியினர் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட உள்ளார்.
இதற்காக ஜனநாயக கட்சியின் 2 நாள் தேசிய மாநாடு அமெரிக்காவின் சிகோகோ நகரில் நடந்து வருகிறது. இன்று 2வது நாள் மாநாடு நடந்து வருகிறது. இதில் ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசினார். அப்போது அவர் கமலா ஹாரிஸ், ஜோ பைடனை புகழ்ந்து பேசினார். அதேவேளையில் கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோம் என்று டொனால்ட் டிரம்ப் பயத்தில் உள்ளதாக பராக் ஒபாமா கூறினார். இதுதொடர்பாக பராக் ஒபாமா கூறியதாவது:
அமெரிக்கா புதிய அத்தியாயத்தை எழுத தொடங்கி உள்ளது. அமெரிக்காவுக்கான சிறந்த கதை உருவாகி வருகிறது. நாம் அனைவரும் கமலா ஹாரிஸை அமெரிக்க அதிபராக தேர்வு செய்ய தயாராகிவிட்டோம். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், முதல் கருப்பின பெண் அதிபராகவும், தெற்கு ஆசியாவை சேர்ந்த முதல் அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுவார். அமெரிக்காவுக்கான ஒளிவட்டம் இப்போதே தெரிகிறது.
தற்போதைய புதிய பொருளாதாரத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனை கவனத்தில் கொள்ளும் ஒருவரை அதிபராக்க வேண்டும். நமது நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்கள், தெருக்களை சுத்தம் செய்பவர்கள், நமக்கான பொருட்களை டெலிவரி செய்வர்களுக்கான நபரை அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான சம்பளம் மற்றும் பணி செய்யும் கண்டிஷன்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். இதற்கு கமலா ஹாரிசை தேர்வு செய்ய வேண்டும்.
78 வயது நிரம்பிய பெரும் கோடீஸ்வரர் (மறைமுகமாக டொனால்ட் டிரம்ப்) ஒருவர் 9 ஆண்டுகளாக புலம்பி வருகிறார். அவர் இன்னும் அந்த புலம்பலை நிறுத்தவில்லை. கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமா என்ற பயத்தில் அவரது புலம்பல் இன்னும் அடங்கவில்லை. மேலும் அந்த புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‛Yes She Can'.. அவளால் (கமலா ஹாரிஸ்) முடியும். நாம் கடந்த சில வாரங்களாக நமக்கான முழு எனர்ஜியையும் பயன்படுத்தி தேர்தல் பணி செய்து வருகிறோம். கமலா ஹாரிஸ் உண்மையிலேயே சிறந்த நிர்வாகி. எனது பதவிக்காலத்தில் Home Mortgage பிரச்சனையில் வீட்டு உரிமையாளர்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்னையும், எனது ஆட்சி நிர்வாகத்தை உந்தி தள்ளியது கமலா ஹாரிஸ் தான்.
அதேபோல் துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ் களமிறங்க உள்ளார். இவர் சிறிய நகரில் பிறந்தவர். நாட்டுக்காக பணியாற்றி வருகிறார். குழந்தைகளுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுப்பது, கால்பந்து கோச்சாக இருந்தது, பக்கத்தில் உள்ளவர்களை கவனித்து கொள்வது என்பது அவரது தனிப்பட்ட சிறப்பம்சமாகும். டிம் வால்ஸ்க்கு அவர் யார் என்று தெரியும். அதேபோல் நாட்டுக்கு எது முக்கியம் என்பதும் தெரியும்.
மேலும் ஜோ பைடனை பற்றி நான் இங்கு கூற விரும்புகிறேன். அமெரிக்க வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும். நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருந்தபோது சிறப்பாக செயல்பட்டவர் என்று வரலாறு அவரது பெயரை கூறும். ஜோ பைடன் எனது நாட்டின் பெருமைமிக்க அதிபர் என்பதை இங்கு கூறி கொள்ள விரும்புகிறேன். அதேபோல் அவர் என் நண்பர் என்பதையும் பெருமையோடு கூறுகிறேன்'' என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தங்களின் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு என்பது பெருகி வருகிறது. கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு சாதகமாக வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் பின்தங்கி உள்ளார். இந்நிலையில் தான் கமலா ஹாரிசை நினைத்து டொனால்ட் டிரம்ப் பயந்துபோய் உள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications