Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பை மதிக்காத ஜி ஜின்பிங்.. சீனாவுக்கு பெரிய அளவில் வரி.. அமெரிக்காவின் பகீர் அறிவிப்பின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனாவை மிரட்ட தொடங்கி உள்ளார். சீனாவுக்கு பெரிய அளவில் வரிகளை விதிக்க உள்ளேன். நான் சீன அதிபரை சந்திக்க எந்த காரணமும் இல்லை என்று திடீரென்று டிரம்ப் கூறியுள்ளார். இது அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் வர்த்தக போரை உருவாக்க உள்ளது. சீனா மீது திடீரென்று டிரம்புக்கு கோபம் அதிகரிக்க என்ன காரணம்? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவும், சீனாவும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே தனிப்பட்ட மோதல் இருந்து வருகிறது. இதனால் தான் சீனாவை குறிவைத்து டிரம்ப் வரிகளை தீட்டினார். மொத்தம் 185 சதவீதம் வரை வரி போட்டார்.

donald-trump-again-threatens-china-with-new-tariffs-and-he-says-no-reason-to-meet-with-xi-jingpin

ஆனால் சீனா பயப்படவில்லை. அமெரிக்காவுக்கு பதிலடியாக வரியை உயர்த்தியது. அமெரிக்காவின் பொருட்களுக்கு 175 சதவீதம் வரியை விதித்தார் ஜி ஜின்பிங். அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அரிய கனிமங்களின் அளவை குறைத்தார்.

இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போரை உருவாக்கியது. அதன்பிறகு இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சீனாவுக்கு கூடுதலாக 30 சதவீத வரியை மட்டும் டிரம்ப் விதித்தார். ஏற்கனவே 25 சதவீத வரியுடன் இந்த 30 சதவீதத்தை சேர்த்து மொத்தம் 55 சதவீத வரி அமலில் உள்ளது.

அதே வேளையில் சீனாவும், அமெரிக்காவுக்கான வரியை நிறுத்தியது. மாறாக அமெரிக்காவில் இருந்து வாங்கும் விவசாய பொருட்களின் அளவை குறைத்தது. அமெரிக்காவுக்கு பதில் பிற நாடுகளிடம் இருந்து விவசாய பொருட்களை வாங்க தொடங்கி உள்ளது. குறிப்பாக அமெரிக்க விவசாயிகளின் சோயாபீன்ஸை வாங்க சீனா மறுத்ததோடு, பிரேசில் பக்கம் சாய்ந்தது. இதனால் அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே தான் கடந்த 2ம் தேதி டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛இன்னும் 4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளேன். சீனாவால், அமெரிக்காவின் சோயாபீன் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். சீனா அமெரிக்காவின் சோயாபீன்களை வாங்கவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்காக அவரை சந்திக்கிறேன். நம் விவசாயிகளை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். சோயாபீன்ஸ் உள்பட பிற விவசாய பொருட்களை உற்பத்தி செய்து மீண்டும் பெரியதாக சாதியுங்கள்'' என தெரிவித்து இருந்தார்.

தென்கொரியாவில் நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (Asia-Pacific Economic Cooperation Forum or APEC) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. அங்கு வைத்து டிரம்ப், ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சீனா சார்பில் இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது டிரம்பை, ஜி ஜின்பிங் சந்திக்க விரும்பவில்லை என்பதை காட்டும் வகையில் உள்ளது. இது டிரம்புக்கு அவமானமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் இன்று ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛நான் இரண்டு வாரங்களில் தென் கொரியாவில் உள்ள ஏபிஇசி (APEC) ஜனாதிபதி ஜியை சந்திக்கவிருந்தேன். ஆனால் இப்போது அந்த சந்திப்பை நடத்த வேண்டிய எந்த காரணமும் இல்லை. அதேபோல் சீனாவுக்கு பெரிய அளவில் வரி விதிக்க முடிவு செய்துள்ளேன்'' என்று கூறினார்.

தென்கொரியாவில் வைத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்த நிலையில் அவர் இப்படி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது சீனாவில் அரியவகை கனிமங்கள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்த தான் அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் அறிவித்தது. இது இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்காவுக்கான அரிய வகை கனிம ஏற்றுமதியை குறைக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கோபப்படுத்தி உள்ள நிலையில் அவர் ஜி ஜின்பிங்கை சந்திக்க போவது இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தற்போது இருநாடுகள் இடையே வர்த்தக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+