"இந்தியாவுக்கு தாராளமா போங்க, ஆனால்.." மீண்டும் சீண்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்! இது ஓவர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறார். இந்தச் சூழலில் அவர் ஆப்பிள் நிறுவனத்தையும் இந்தியாவையும் சீண்டும் வகையில் மீண்டும் பேசியிருக்கிறார்.
அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக மாற்றப்போகிறேன் எனச் சொல்லி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தக சந்தையில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தையும் இந்தியாவையும் சீண்டும் வகையில் பேசியிருக்கிறார்.

மீண்டும் சீண்டிய டிரம்ப்
ஆப்பிள் நிறுவனம் தாராளமாக இந்தியாவில் அதன் தொழிற்சாலைகளை அமைக்கலாம் என்றும் அதற்கான உரிமையும் சுதந்திரமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் அவற்றை அமெரிக்காவில் விற்கும்போது கூடுதல் வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அணுசக்தி தொடர்பான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் போது அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான தனது உரையாடலைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஐபோன்களை அமெரிக்காவிலேயே தயாரிக்கும்படி நான் டிம் குக்கிடம் சொன்னேன். ஆனால், அவர் அதைச் செய்ய மாட்டார் என்றே நினைக்கிறார்.
கூடுதல் வரி
அவர் இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளதாகக் கூறினார். அதற்கு நான் சொன்னேன், 'இந்தியாவுக்கு நீங்கள் தாராளமாகப் போகலாம்.. ஆனால், கூடுதல் வரிகளை எதிர்கொள்ளாமல் உங்களால் அமெரிக்காவில் ஐபோன்களை விற்க முடியாது.. அதுவே ஒரே வழி' என நான் அவரிடமே தெளிவாகக் கூறிவிட்டேன்.
டிரம்ப் மேலும் பேசுகையில், "ஐபோன்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு வெளியே செய்வது சரியான போக்கு இல்லை. அவர்கள் அமெரிக்காவில் ஐபோன்களை விற்க வேண்டும் என்றால்.. அமெரிக்காவில் தான் அதைத் தயாரிக்கவும் வேண்டும். இதில் நான் தெளிவாக இருக்கிறேன். இதில் வேறு பேச்சுக்கே இடமில்லை" என்றார். ஐபோன் விவகாரத்தில் டிரம்ப் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் இந்தியாவில் உற்பத்தி செய்தால் கூடுதல் வரியை எதிர்கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யாராக இருந்தாலும் வரி
ஆப்பிள் மட்டுமின்றி வேறு எந்தவொரு நிறுவனமும் அமெரிக்காவுக்கு வெளியே உற்பத்தி செய்து, அதை அமெரிக்காவில் விற்க விரும்பினால் கூடுதல் வரிகளைச் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். முதலில் டிரம்ப் இது தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும்போது, ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்போகிறேன் என்பது போலப் பேசியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அனைத்து செல்போன் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பேன் என அறிவித்திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், "ஆப்பிள் என்றில்லை.. சாம்சங் உட்பட எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி, அவர்கள் வரியை எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான் சரியாக இருக்கும். ஜூன் மாதம் இறுதி முதல் இந்த வரிகள் அமலுக்கு வரும்" என்றார்.
டிரம்ப் இப்படிச் சொல்வது ஏன்?
கூடுதல் வரிகளை விதித்தால் நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியைத் தொடங்கும் என்பதே டிரம்பின் நம்பிக்கை. ஆனால், அமெரிக்காவில் உற்பத்தி செலவுகள் அதிகரித்தாலேயே இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறின. மீண்டும் அவை அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் பொருட்களின் விலைகளும் பல மடங்கு அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.
-
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications