"டைம் வேஸ்ட்.." ஜோ பிடனுடனான 2வது விவாதத்தில் பங்கேற்க ட்ரம்ப் மறுப்பு.. நிகழ்ச்சி ரத்து
வாஷிங்டன்: ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடனான 2வது விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவாதம் நேர விரையம் என்று இதற்கு ஒரு 'சாக்கும்' சொல்லியுள்ளார் ட்ரம்ப்.
ஜோ பிடன் மற்றும் ட்ரம்ப் இடையே, அக்டோபர் 15ம் தேதி மியாமியில் வைத்து, வாத நிகழ்ச்சி நடத்த, 'அதிபர் விவாதத்திற்கான கமிஷன்' ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால், "ஆரோக்கியத்தை காக்கவும், பங்கேற்போரின் பாதுகாப்புக்காகவும், இந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது" என்று, கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு
டொனால்ட் ட்ரம்ப் அக்டோபர் 1ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார். அங்கு வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

வாதம் ரத்து
இந்த நிலையில்தான், கொரோனா பரவலை தடுக்க, இந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்தனைக்கும் இந்த விவாதம் மெய்நிகர் முறையில் நடைபெறுவதாக இருந்தது. அதாவது வீடியோ வாயிலாக ட்ரம்ப் மற்றும் பிடன் விவாதிப்பதாக இருந்தது. இதன்பிறகு, டெனிசீ நாஷ்வில்லில் அக்டோபர் 22ம் தேதி ஒரு விவாதம் நடைபெற உள்ளது.

நேரம் வேஸ்ட்
இதனிடையே, ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு தொலைபேசி வாயிலாக, பேட்டியளித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், நான், இந்த விவாதத்தில் பங்கேற்று, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். விவாதம் என்பது இப்படியானதாக இருப்பது கிடையாது என்று அவர் கூறியுள்ளார். நேருக்கு நேர் விவாதம் நடைபெறாது என்பதை காரணம் காட்டி ட்ரம்ப் இவ்வாறு விவாதத்தை தட்டிக் கழிப்பதாக கூறியுள்ளார்.

முதல் முறை இல்லையே
இப்படி தனித்தனி இடங்களில் இருந்து அதிபர் தேர்தலுக்கான விவாத நிகழ்ச்சி நடப்பது இது முதல் முறை இல்லை. 1960ம் ஆண்டு, ஜான் கென்னடி மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகிய அதிபர் வேட்பாளர்கள் இடையே, தனித்தனி இடங்களில் இருந்தபடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. கென்னடி நியூயார்க் சிட்டியிலிருந்தபடியும், நிக்சன் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்தபடியும் வாதம் செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications