பாக்., பிரதமரை மதிக்காத டிரம்ப்.. வெள்ளை மாளிகையில் நடந்த அவலம்.. 30 நிமிடம் காக்க வைத்த பரிதாபம்
வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் அமெரிக்க சென்று வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. வெள்ளை மாளிகையில் அவரை 30 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருக்க வைத்து அவமானப்படுத்தி உள்ளார். மேலும் வெள்ளை மாளிகையில் அவருக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாகிஸ்தானும், அமெரிக்காவுடன் கைகோர்த்து செயல்பட தொடங்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை பந்தாடியது. கடந்த மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானை பதம் பார்த்தன.

பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்சியது. நாங்கள் வாலை சுருட்டி கொள்கிறோம். எங்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் நம் நாட்டின் ராணுவ அதிகாரியிடம் மண்டியிட்டது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் இந்த போரை நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் நம் நாடு டிரம்பின் கூற்றை ஏற்கவில்லை. பாகிஸ்தான் கேட்டு கொண்டதால் தான் போர் நிறுத்தப்பட்டது. இதில் டிரம்பின் பங்கு எதுவும் இல்லை என்று நம் நாடு உறுதியாக கூறி வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ, அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் போரை நிறுத்தினார். இல்லாவிட்டால் பேரழிவு ஏற்பட்டு இருக்கும்.
இதனால் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் உரையாற்றியபோதும் கூட ஷெபாஸ் ஷெரீப் இந்தியா - பாகிஸ்தான் போரை அதிபர் டிரம்ப் தான் நிறுத்தினார். இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்று கூறினார்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினர். பொதுவாக வெள்ளை மாளிகைக்கு ஒரு நாட்டின் தலைவர் டிரம்பை சந்திக்க செல்லும்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அப்படியான வரவேற்பு அளிக்கப்படவில்லை.
அதேபோல் டிரம்ப்பை சந்திக்க வரும் வெளிநாடுகளின் தலைவர்களை டிரம்ப் அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் வரவேற்பார்கள். குறிப்பாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அல்லது மூத்த அதிகாரிகள் ரவேற்பு அளிப்பார்கள். ஆனால் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அத்தகை வரவேற்பு கிடைக்கவில்லை.
இதுதவிர ஷெபாஸ் ஷெரீப் வெள்ளை மாளிகைக்கு சென்றது பற்றி அறிந்தும் டிரம்ப் உடனடியாக அவரை சந்திக்கவில்லை. ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசீம் முனீர் ஆகியோரை 30 நிமிடங்கள் வரை காக்க வைத்தார். இவர்கள் வெள்ளை மாளிகைக்கு சென்ற சமயத்தில் டிரம்ப் இன்னொரு பணியில் இருந்தார். இதனால் அவர் அந்த பணியை முடித்து அரை மணிநேரத்துக்கு பிறகு தான் ஷெபாஸ் ஷெரீப்பையும், அசீம் முனீரையும் சந்தித்துள்ளார்.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசீம் முனீர் ஆகியோர் உடனான சந்திப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப், ‛அவர்கள் (ஷெபாஸ் ஷெரீப், அசீம் முனீர்) அழகான ஓவல் அலுவலகத்தின் அறையில் இப்போது இருக்கலாம். பாகிஸ்தான் பிரதமர் சிறந்த மனிதர், பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் சிறந்த மனிதர் என்று கூறினார். பொதுவாக இப்படியான பாராட்டுகளின்போது டிரம்ப் அந்த தலைவர்களின் பெயர்களை கூறுவார். ஆனால் தற்போது ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசீம் முனீர் ஆகியோரின் பெயர்கைள அவர் கூறவில்லை. வெறுமனே பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவ தளபதி என்று மட்டுமே கூறினார்.
அதன்பிறகு டிரம்ப், ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசீம் முனீர் ஆகியோருடன் மூடிய அறையில் இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தார். இது பாகிஸ்தானுக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஷெபாஸ் ஷெரீப்பை டிரம்ப் அவமரியாதையாக நடத்தியது மைனஸாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா தங்களின் முக்கியமான நட்பு நாடு என்று கருதும் பாகிஸ்தானுக்கு இது அவமானமாக பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோரை டிரம்ப் மதிக்காமல் அவமரியாதை செய்தது உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள டிரம்ப் நினைக்கிறார். மற்றபடி பாகிஸ்தானை நெருக்கமான நட்பு நாடாக டிரம்ப் நினைக்கவில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
-
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications