டிரம்ப் தடாலடி.. ஒரே உத்தரவில் 1600 பேர் டிஸ்மிஸ்! உலகெங்கும் எதிரொலிக்க போகும் தாக்கம்! வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்காவின் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வரும் டிரம்ப் நிர்வாகம், வெளிநாடு நிதியுதவிகளை நிறுத்த உத்தரவிட்டது. இதற்கிடையே திடீரென 1600 பேரை வேலையை விட்டு நீக்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலரைத் தற்காலிகமாக விடுப்பில் அனுப்பியும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக உலக வல்லரசான அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளிலும் பல திட்டங்களுக்கு நிதியுதவி செய்யும். இது USAID மூலம் செய்யப்படும். இதற்காகப் பல மில்லியன் டாலரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா ஒதுக்கும்.

இருப்பினும், டிரம்ப் இதை வீண் செலவாகவே பார்த்தார். இதனால் வெளிநாட்டு உதவிகளை மொத்தமாக நிறுத்த அவரது அரசு உத்தரவிட்டது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி உலகெங்கும் பல திட்டங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
1600 பேர் டிஸ்மிஸ்
இதற்கிடையே உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய ஊழியர்களைத் தவிர, USAIDஇல் அனைத்து பணியாளர்களையும் ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் வைப்பதாக அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. மேலும், 1,600 பேரை மொத்தமாக வேலையை விட்டு நீக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா நேரப்படி ஞாயிறு இரவு இந்த உத்தரவு வெளியானது. அத்தியாவசியத் தொழிலாளர்களைத் தவிர அனைத்து USAID ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள சுமார் 1,600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை தரப்பில் இது தொடர்பாக நேரடியாக எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
பிரச்சினை உருவாகும்
இது தொடர்பாக USAID அதிகாரிகள் கூறுகையில், "சுமார் 1600 பேர் வேலை இழந்துள்ளனர். இது தவிர சுமார் 4,600 USAID பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் நிர்வாகத்திற்கு சில விஷயங்கள் புரிவதில்லை. செலவுகளைக் குறைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் குறுகிய காலத்திற்குப் பலன் தரலாம். ஆனால், இது அமெரிக்க அரசின் திறனைக் குறைப்பதாக இருக்கிறது.
திடீரென நோய் பரவல் ஏற்படும் போது, முக்கிய பிரச்சினைகள் ஏற்படும் போதும் இந்த USAID ஊழியர்கள் தான் முதலில் களத்திற்குச் செல்வார்கள். பிரச்சினையைச் சரி செய்ய முயல்வார்கள். அவர்களை மொத்தமாக வேலையைவிட்டு நீக்குவது பிரச்சினையே உருவாகும். காலம் செல்ல செல்ல இதையெல்லாம் மக்கள் புரிந்து கொள்வார்கள்" என்றார்
உலகெங்கும் தாக்கம்
டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற உடனேயே அனைத்து வெளிநாட்டு நிதியையும் 90 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இதனால் மூன்றாம் உலக நாடுகளில் தடுப்பூசி திட்டம் அனைத்துமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு டாஜ் துறை இந்த நிதியுதவிகளை நிரந்தரமாக நிறுத்த பரிந்துரைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த டிஸ்மிஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொடரும் டிரம்பின் தடாலடி
இதுபோல வல்லுநர்கள் எவ்வளவு தூரம் எச்சரித்தாலும் டிரம்ப் அதை எல்லாம் காதில் போடுவதாகத் தெரியவில்லை. டிரம்ப்பை பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு வெளியே செல்லும் அனைத்து நிதியுமே தேவையில்லாத நிதியாகவே கருதுகிறார். மேலும், உலக நாடுகள் மீதும் சரமாரியாக வரிகளை விதித்து வருகிறார். இந்த தடாலடி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பின்னணி
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனேயே அனைத்து வெளிநாட்டு நிதியையும் 90 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இதனால் மூன்றாம் உலக நாடுகளில் தடுப்பூசி திட்டம் அனைத்துமே கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு டாஜ் துறை இந்த நிதியுதவிகளை நிரந்தரமாக நிறுத்த பரிந்துரைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த டிஸ்மிஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொடரும் டிரம்பின் தடாலடி
இதுபோல வல்லுநர்கள் எவ்வளவு தூரம் எச்சரித்தாலும் டிரம்ப் அதை எல்லாம் காதில் போடுவதாக தெரியவில்லை. டிரம்ப்பை பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு வெளியே செல்லும் அனைத்து நிதியுமே தேவையில்லாத நிதியாகவே கருதுகிறார். மேலும், உலக நாடுகள் மீதும் சரமாரியாக வரிகளை விதித்து வருகிறார். இந்த தடாலடி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications