டிரம்ப்பை வெளியே தள்ளிய CIA.. கண்ட்ரோலை எடுத்த துணை அதிபர்.. ஈரான் போரில் இதுதான் நடந்ததாம்!
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க விமானப்படையின் எஃப்-15 (F-15 Eagle) போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது அமெரிக்க விமானிகள் மாயமான நிலையில், அப்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடந்து கொண்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் மோதல் வெடித்தது. இந்த மோதல் முதலில் சில வாரங்கள் மிகத் தீவிரமாக நடந்தது. ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்ட சூழலில், நிலைமை மோசமானது. இதற்கிடையே போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது வெள்ளை மாளிகையில் நடந்த சில விஷயங்கள் குறித்து இப்போது பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிரம்ப்
அப்போது ஏப்ரல் 3-ம் தேதி அமெரிக்கப் போர் விமானங்களை ஈரான் சுட்டுள்ளது. போர் விமானம் சுடப்பட்டபோது, ஒரு விமானி உடனடியாக மீட்கப்பட்டார். ஆனால், இரண்டாவது விமானி ஈரானின் மலைப் பகுதிகளுக்குள் சிக்கிக் கொண்டார். அவரைத் தேடும் பணி 'வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போல' இருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
சிஐஏ-வின் மாஸ்டர் பிளான்
முதலில் ஈரான் படைகளைத் திசைதிருப்ப, "விமானி மீட்கப்பட்டுவிட்டார்" என சிஐஏ ஒரு போலி தகவலைப் பரப்பியது. அதாவது பைலட்டை மீட்கும் முன்பே அவரை மீட்டுவிட்டதாக சிஐஏ ஒரு போலி தகவலைப் பரப்பியது. இதன் மூலம் ஈரான் படைகள் தங்கள் தேடுதல் வேட்டையை ரிலாக்ஸ் செய்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா மாயமான பைலட்டை கண்டுபிடித்துவிட்டது. ஒரு மலை இடுக்கில் மறைந்திருந்த அந்த வீரரை சிஐஏ மற்றும் பென்டகன் படைகள் இணைந்து பத்திரமாக மீட்டன.
விமானியை மீட்கும் நடவடிக்கைகள் ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் நடந்து கொண்டு இருந்தபோது, அதிபர் ட்ரம்ப் அங்கிருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது ட்ரம்ப்பின் பொறுமையின்மை மற்றும் கோபம் ஆகியவை போர் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி, அவரை ரூமிற்குள் அனுமதிக்கவில்லையாம். துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே நேரடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கத்திய டிரம்ப்
ட்ரம்ப்பிற்கு முக்கியமான நேரங்களில் மட்டுமே போன் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உச்சக்கட்ட கோபத்திற்குப் போன டிரம்ப், தனது அதிகாரிகளிடம் இது தொடர்பாக மணிக்கணக்கில் திட்டி தீர்த்தாக அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானி மீட்கப்பட்ட பிறகு, ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஈரானை எச்சரிக்கும் விதமாகப் பதிவுகளை வெளியிட்டார். அதில் வழக்கத்திற்கு மாறாக மத அடையாளங்கள் தொடர்பான வார்த்தையைப் பயன்படுத்தியது சர்ச்சையானது. இது குறித்து அப்போதே டிரம்ப் தனது ஆலோசகர்களிடம் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ட்ரம்ப் தனது ஆலோசகர்களிடம், "ஈரான் தலைவர்களைக் குழப்பவும், அவர்களை எரிச்சலூட்டவுமே இப்படிச் செய்தேன். நான் கணிக்க முடியாத ஆள் என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
ஏப்ரல் 7-ம் தேதி, "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியப் போகிறது" என்று ஈரானை மிரட்டிய ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உத்தரவிட்டார்.. ஆனால், சில மணிநேரங்களிலேயே ஏப்ரல் 8 முதல் இரண்டு வாரக் காலத்திற்குத் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்போது கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு, போர் நிறுத்தத்தை நீட்டிக்கவே முடியாது எனச் சொன்ன டிரம்ப், இரவு தனது முடிவை மாற்றிப் போர் நிறுத்ததை நீடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications