டிரம்ப் என்றாலே பேரழிவா? அமெரிக்காவை பார்த்து உலக நாடுகள் பயப்பட வேண்டுமா? 5 மேஜர் பாயிண்டுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் பதவியேற்கும் சூழலில், உலகமே அந்த நிகழ்வைத் தான் எதிர்நோக்கி இருக்கிறது. ஒரு சிலர் டிரம்பின் பதவியேற்பால் பாதிப்பு ஏற்படுமோ என்றும் கூட அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் டிரம்ப் வருகையால் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என்பதை டிரம்பின் கடந்த கால ஆட்சியே நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்கிறார். டிரம்பின் பதவியேற்பைச் சுற்றிலும் ஏகப்பட்ட தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது. சிலர் டிரம்பால் ஆபத்து என்பது போலவும் கூடச் சொல்லி வருகிறார்கள்.

donald trump inauguration donald trump

ஆனால், உண்மையில் டிரம்பால் சர்வதேச அளவில் எந்தவொரு பிரச்சினையும் வர வாய்ப்பு குறைவு. டிரம்பின் கடந்த கால ஆட்சியை எடுத்துப் பார்த்தாலே இது நமக்குப் புரியும். இது குறித்து 5 மேஜர் பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.

சர்வதேச அமைதி:

கடந்த 2017 முதல் 2021 வரை டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் மேஜர் போர் எதுவும் ஏற்படவில்லை. சொல்லப்போனால் வடகொரியா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்காவுக்கு இருந்த பதற்றம் குறையவே செய்தது. மாறாக டிரம்ப் ஆட்சிக் காலத்திலேயே ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் என வரிசையாகப் போர் வெடித்தது.

மேலும், பிரச்சாரத்தின் போதே இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் எனக் கூறியிருந்தார். குறிப்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தான் பதவியேற்கும் முன்பு போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய கிழக்கே நரகம் ஆகிவிடும் என்பது போலப் பேசியிருந்தார். அவர் சொன்ன சில நாட்களில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தது. இதுவே ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இதேபோல உக்ரைன் போரையும் முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கப் பொருளாதாரம்:

அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் டிரம்ப் அதிக கவனம் செலுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிரச்சாரத்தின் போதே டிரம்ப் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே சட்டத்தைக் கொண்டு வர உள்ளதாகத் தொடர்ந்து வாக்குறுதி அளித்து வந்தார். எனவே, அவரது முதற்கட்ட நடவடிக்கைகளில் பொருளாதாரம் முக்கியத்துவம் பெறும் என்றே தெரிகிறது.

டிரம்ப் 2017-2021 ஆட்சியில் வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய ஒரு பூஸ்ட்டை கொடுத்தது. எனவே, அதேபோல பொருளாதாரத்தை மேம்படுத்த மேஜர் நடவடிக்கைகளை அவர் எடுக்கலாம். மேலும், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அவர் முக்கிய நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரிகிறது.

சர்வாதிகார ஆட்சி வருமா:

அமெரிக்காவில் சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வருவாரோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் அதிபராகவே இருந்தாலும் அவருக்குப் பல செக் வைக்கும் வகையிலேயே அந்நாட்டின் சட்டம் இருக்கிறது. எனவே, டிரம்பால் நினைத்த முடிவுகளை எல்லாம் இஷ்டத்திற்கு எடுக்க முடியாது. உதாரணத்திற்கு டிரம்ப் எமெர்ஜின்சி நிலையை அறிவித்து, மெக்சிகோ சுவர் கட்டும் திட்டத்தை மேற்கொள்கிறார் என்றால்.. அதே அமெரிக்க நாடாளுமன்றத்தால் தடுக்க முடியும். இதுபோல கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கையிலும் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் மேஜர் பிரச்சினை எதுவும் இல்லாமலேயே இருந்தது. சர்வதேச அளவில் டிரம்பால் இதைச் சாதிக்க முடிந்தது. குறிப்பாக வடகொரிய அதிபர் கிம்மை டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் வெளியுறவுக் கொள்கையில் டிரம்ப் சாதித்தவை.

ரஷ்யா உக்ரைன் போரைப் பொறுத்தவரை கூட டிரம்ப் யார் செய்தது சரி, எதில் தவறு என்பதற்குள் போகவில்லை. அது குறித்து கருத்தும் சொல்லவில்லை. மாறாக ஜெலென்ஸ்கியை ஆதரிப்பதற்காக அமெரிக்க பல பில்லியன்களை செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் இதனால் போரைச் சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மட்டுமே அவர் சொல்லி வந்தது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்

அடுத்துப் புலம்பெயர்ந்தோர் விவகாரம்.. டிரம்ப் புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விவகாரத்திலேயே அவர் நடவடிக்கை எடுக்கப் போகிறார். சட்டப்பூர்வமாக முறையான விசா வாங்கி அமெரிக்காவில் நுழைந்தோருக்கு இதனால் எந்தவொரு பிரச்சினையும் வராது.

சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரைத் தடுக்கவே அங்குச் சுவர் கட்டவும் கூட டிரம்ப் முடிவு செய்திருந்தார். இப்போதும் அதுபோல சட்டவிரோதமாகக் குடியேறுவோர் மீது மட்டுமே டிரம்ப் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இருக்கிறார். அதேநேரம் ஹெச் 1-பி விசா உள்ளிட்ட விவகாரங்களில் டிரம்ப் ஆதரவாகவே இருக்கிறார் என்பதால் அதில் எந்தவொரு பிரச்சினையும் வராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+