ருத்ரதாண்டவமாடும் இஸ்ரேல்.. டிரம்பை திடீரென சந்தித்த நெதன்யாகுவின் ஆலோசகர்.. ஈரானுக்கு ஸ்கெட்ச்சா?
வாஷிங்டன்: காசா மீதான போர், லெபனான் மற்றும் ஈரான் உடனான மோதலுக்கு நடுவே அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசியல் ஆலோசகர் ரான் டெர்மர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஒரேநேரத்தில் 3 நாடுகளை எதிர்த்து சண்டையிட்டு வருவது தான் இதற்கு காரணம். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை நாடான லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதேபோல் ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பி உள்ளது. இதனால் லெபனானின் ஹிஸ்புல்லா, ஈரானுடனும், இஸ்ரேல் மோதி வருகிறது.
சமீபத்தில் ஈரான் சார்பில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஈரானுக்குள் நுழைந்து ஏவுகணைகளை குண்டுகளாக வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மத தலைவர் அயதுல்லா அலி காமேனி தயாராக இருக்க படைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மக்களுக்கு வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்
"ஈரானின் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு இஸ்ரேலை விட பயம் ஒன்று இருக்கிறது. அது நீங்கள் தான் (ஈரான் மக்கள்). உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என கூறியுள்ளார். இதுவும் ஈரானை கோபப்படுத்தி உள்ளது.
இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் என்பது இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விவகாரங்களால் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசியல் ஆலோசகர் ரான் டெர்மர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதாவது அமெரிக்காவில் ஏராளமாக யூதர்கள் வசித்து வருகின்றனர். அதோடு யூதர்கள் எம்பிக்களாகவும் உள்ளனர். இந்நிலையில் தான் அமெரிக்காவின்நிவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் எனும் இடத்தில் ஆர்ஜேசி எனும் ரிபப்ளிகன் ஜீவிஸ் கொலிசனின் இந்த ஆண்டுக்கான தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசியல் ஆலோசகர் ரான் டெர்மர் பங்கேற்றார்.
இந்த ரான் டெர்மர் அமெரிக்காவில் பிறந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர். மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நம்பிக்கையை பெற்றவர். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதராக இருந்தவர் தான் இந்த ரான் டெர்மர். அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதராக இவர் 2013 முதல் 2020ம் ஆண்டு வரை செயல்பட்டார். அதன்பிறகு தற்போது இஸ்ரேலில் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி உதவியாளராக செயல்பட்டு வருகிறார்.
அமெரிக்காவில் 7 ஆண்டுகளாக இஸ்ரேல் தூதராக பணியாற்றியதால் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரான் டெர்மர் இடையே முன்கூட்டியே நல்ல பழக்கம் என்பது இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் ரான் டெர்மர் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு என்பது மார் - எ- லாகாவில் நடந்துள்ளது. இந்த மீட்டிங் என்பது மிகவும் ரகசியமாக நடந்துள்ளது. இதனால் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மீட்டிங் பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மீட்டிங்கில் காசா மீதான போர், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு எதிரான மோதல் பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சார்பில் ரான் டெர்மர், டொனால்ட் டிரம்பிடம் விளக்கி உள்ளார். அதேபோல் காசா, லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்காவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛இந்த சந்திப்பு என்பது 2 விஷயங்களை அடிப்படையாக கொண்டது. ஜனவரி 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக செயல்பட உள்ளார். அதற்கு முன்பாக இஸ்ரேல் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் அதிபரான பிறகு கையில் எடுத்து தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பற்றி விவாதத்தை மையப்படுத்தி உள்ளது'' என்றார்.
அதோடு அமெரிக்கா அதிபரான பிறகு டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்த முயற்சிகள், போர் முடிவடைந்த பிறகு காஸாவிற்கான திட்டம் மற்றும் இஸ்ரேல்-சவூதி அரேபியா இடையேயான பிரச்சனைகளை தீர்த்து இயல்பு நிலையை கொண்டு வருவது உள்ளிட்டவற்றை டொனால்ட் டிரம்ப் கையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உதவியாளர் ரான் டெர்மரின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர்களின் சந்திப்பு என்பது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தை குறைக்கிறதா? அதிகரிக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் இஸ்ரேலை போல் ஈரான் மீது டொனால்ட் டிரம்பும் கடும் கோபத்தில் உள்ளார். இதனால் ஈரானை பழிதீர்க்க இஸ்ரேல் மூலம் டிரம்ப் ஏதேனும் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications