Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானுக்கு விழுந்த முதல் அடி.. அதிபரானதும் வேலையை காட்டிய டிரம்ப்.. அமெரிக்கா போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பெரிய அளவில் மோதல் என்பது இருந்து வருகிறது. குறிப்பாக ஈரானை கடுமையாக எதிர்த்து வரும் டொனால் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதும் தனது வேலையை காட்டி முதல் அடியை வசமாக கொடுத்துள்ளார். இதனால் ஈரான் கலக்கத்தில் உள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதல் அதிரடியாக பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார். டொனால்ட் டிரம்பால் மொத்த நாடுகளும் கலக்கத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

iran donald trump houthi

இதற்கு அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் தான் காரணம். அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்போர் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை ரத்து என்ற அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்துள்ளார்.

இதில் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை ரத்து என்ற உத்தரவை செயல்படுத்த தற்காலிக தடை உத்தரவு அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்புகள் அனைத்து நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம். அதோடு உலக பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். சரி இது இருக்கட்டும். இப்போது நாம் அமெரிக்கா - ஈரான் இடையேயான பனிப்போர் பற்றி பார்க்கலாம்.

அமெரிக்கா வல்லரசு நாடு. இந்த நாட்டுடன் மோதுவதை பல நாடுகள் விரும்புவது இல்லை. ஆனால் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதலை தொடர்ந்து வருகிறது. அதில் ஒரு நாடு தான் ஈரான். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இருநாடுகள் இடையே சுமூக உறவு என்பது இல்லை. இதனால் தான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலின்போது டொனால்ட் டிரம்ப் ஆக்ரோஷமாக கருத்துகளை முன்வைத்தார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுஉலைகள் மற்றும் பாதுகாப்பு துறையின் பிற இடங்களை குறிவைத்து தாக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தினார்.

இந்த அறிவுரையை கடந்த ஆண்டு வழங்கியபோது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இல்லை. ஆனால் இப்போது டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று விட்டார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதுமே ஈரானுக்கு முதல் அடியை டிரம்ப் இப்போது கொடுத்துள்ளார். அதாவது ஈரான் ஆதரவுடன் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினரை ‛வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' ('foreign terrorist organisation) என்ற பட்டியலில் டிரம்ப் சேர்த்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட உத்தரவில், ‛‛மத்திய கிழக்கில் வசிக்கும் மற்றும் அங்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஹவுதிகள் ஏற்படுத்துகின்றன. அதேபோல் அமெரிக்கா மட்டுமின்றி நம்முடன் நெருக்கமாக இருக்கும் நாடுகளின் கடல்சார் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி தாக்குதல் நடத்துகின்றன. இதனால் ஹவுதி அமைப்பை ‛வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' என்ற பட்டியலில் சேர்க்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஹவுதியை இந்த பட்டியலில் டொனால்ட் டிரம்ப் சேர்ப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அவர் 2017 முதல் 2021 ம்ஆண்டு ஜனவரி வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டார். அப்போது தனது பதவிக்காலத்தின் இறுதியில் டொனால்ட் டிரம்ப் ஹவுதியை இந்த பட்டியலில் சேர்த்தார். டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அதிபராக வந்த ஜோ பைடன் கடந்த 2021ம் ஆண்டு ஹவுதியை அந்த பட்டியலில் இருந்து நீக்கினார். அதன்பிறகு கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் 7ம் தேதி காசாவில் இருந்து ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து கொடிய தாக்குதலை நடத்தினர். இதில் 1200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது தான் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடிக்க காரணமாக இருந்தது.

இந்த போருக்கு பிறகு ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹவுதிகளும் தாக்குதல் நடத்த தொடங்கினர். குறிப்பாக செங்கடல் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஹவுதிகள் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் கொதித்துப்போன ஜோ பைடன் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளை மீண்டும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தார் ஜோ பைடன். ஆனால் அப்போது அவர் ஹவுதிகளை எஸ்டிஜிடி எனும் 'specially designated global terrorist' என்ற பட்டியலில் தான் சேர்த்திருந்தார். இதன்மூலம் ஹவுதிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியாது.

ஆனால் இப்போது டொனால்ட் டிரம்ப் ஹவுதிகளை 'foreign terrorist organisation' என்ற பட்டியலில் சேர்த்து உள்ளார். இது ஈரான் மற்றும் ஹவுதிக்கு பேரிடியாக விழுந்துள்ளது. டிரம்ப் நடவடிக்கையால் ஹவுதிகள் ‛வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' பட்டியலில் உள்ளது. இது ஜோ பைடன் சேர்த்த எஸ்டிஜிடி பட்டியலை விட மோசமானது. அதாவது ஹவுதி அமைப்பை டிரம்ப் நடவடிக்கை என்பது பலவீனப்படுத்தும்.

புரியும்படி கூற வேண்டும் என்றால் எஸ்டிஜிடி பட்டியலில் இருந்தால் அது வெறும் பயங்கரவாத அமைப்பாக மட்டுமே இருக்கும். ஆனால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் ஒரு அமைப்பு இருக்கும்போது அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் உதவி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை எடுக்கலாம். அதேபோல் ஹவுதிக்கு உதவும் நபர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றால் அவர்களால் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது. அதேபோல் ஹவுதி அமைப்பின் தாக்குதலில் ஒருவர் பாதிக்கப்படும்போது அந்த அமைப்புக்கு உதவி செய்தவரிடம் இருந்தும் இழப்பீடு கோர இது உதவும். இதன்மூலம் ஏமனில் செயல்படும் ஹவுதிகளை வெளிநாடு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்து ஈரானுக்கு செக் வைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

ஈரானை எடுத்து கொண்டால் வெளிநாடுகளில் தனது ஆதரவு அமைப்பு மற்றும் கிளர்ச்சி படைகளை உருவாக்குவதில் கைதேர்ந்து செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் ஈரான் ஆதரவில் தான் செயல்பட்டன. இந்த 2 அமைப்புகளும் இஸ்ரேலுக்கு கடும் குடைச்சல் கொடுத்ததை நம்மால் மறக்க முடியாது. தற்போது இரு அமைப்புகளின் தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. இதனால் ஹமாஸ், ஹிஸ்புல்லா வலுவிழந்து காணப்படும் சூழலில் டொனால்ட் டிரம்ப் இப்போது ஈரானின் இன்னொரு ஆயுதக்குழுவான ஏமன் நாட்டின் ஹவுதிகளையும் முடக்கி உள்ளார். இது ஹவுதிகளை அடக்க எடுத்த நடவடிக்கை மட்டும் அல்ல... ஈரானுக்கும் சேர்த்து டிரம்ப் வைத்த செக் என்கிறது அமெரிக்கா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+