"மோசமான விளைவு ஏற்படும்".. ஹமாசுக்கு கெடு விதித்த டிரம்ப்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிவிப்பு
வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காசாவில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக்கைதிளை உடனடியாக விடுவிக்க வேண்டும். நான் அமெரிக்க அதிபராகும் முன் இதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை கொல்லப்பட்டனர். அதோடு இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டை சேர்ந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடுத்தார். இந்த போர் ஓராண்டை கடந்து நடந்து வருகிறது. மொத்தம் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் 150 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 100 பேர் பணயக்கைதிகளாக காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்போது வரை காசாவில் 44,429 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதோடு இந்த போர் கடலோர பகுதிகளை ஏறக்குறைய முற்றிலுமாக அழித்து விட்டது. மொத்தம் 2.3 மில்லியன் (அதாவது 23 லட்சம் பேர்) மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது நான் காசாவில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். நான் அதிபராகும் முன்பு அவர்களை விடுவிக்காவிட்டால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: நான் 2025 ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளேன். அதற்கு முன்பாக பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மனித குலத்துக்கு எதிரான இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பாக மோசமான விளைவை சந்திக்க நேரிடும்'' என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்பின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இதுபற்றி இஸ்ரேல் தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications