"வேட்டை நடக்கும்.." பைடன் வழங்கிய பொது மன்னிப்புகள் ரத்து.. இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்த டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பைடன் இருந்த போது, ராஜினாமா செய்ய சில நாட்களுக்கு முன்பு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தார். இதற்கிடையே பைடனின் உத்தரவுகள் அவருக்கே தெரியாமல் பிறப்பிக்கப்பட்டவை என்று கூறியுள்ள டிரம்ப், அதில் பல உத்தரவுகளை ரத்து செய்தும் உத்தரவிட்டார். இது பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் போடும் ஒவ்வொரு உத்தரவுகளும் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இப்போது பைடனின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சில உத்தரவுகளைச் செல்லாது என அவர் அறிவித்துள்ளார். பைடனுக்கே தெரியாமல் அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

பொது மன்னிப்பு
அதாவது பொதுவாக எந்தவொரு அதிபரும் தனது பதவிக்காலம் முடியும்போது சிலருக்கு பொது மன்னிப்பை வழங்கலாம். அதிபருக்கு எனத் தனியாக சில அதிகாரம் இருப்பதால் குற்றம் செய்தவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க முடியும். டிரம்பும் கூட தனது ஆட்சிக் காலத்தின் கடைசிக்கட்டத்தில் பொது மன்னிப்பை வழங்கியிருந்தார். அதேபோலத் தான் டிரம்பும் கூட அதிபர் பதவியில் இருந்து விலக சில மணி நேரத்திற்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களான ஜேம்ஸ் மற்றும் பிரான்சிஸ் பைடன், சகோதரி வலேரி பைடன் ஓவன்ஸ் மற்றும் அவர்களது பார்ட்னர்கள் எனப் பலருக்கும் பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.
ரத்து செய்யும் டிரம்ப்
இந்த பொது மன்னிப்புகள் தான் செல்லாது என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு நபரின் கையெழுத்தை அப்படியே நகலெடுக்கும் ஆட்டோபென் சாதனத்தைப் பயன்படுத்தி பைடனின் கையெழுத்துகள் இந்த பொது மன்னிப்பு உத்தரவுகளில் போடப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவுகள் குறித்து பைடனுக்கு எதுவுமே தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோல அதிபருக்கே தெரியாமல் கையெழுத்தைப் போட்டுச் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருக்கலாம் என்றும் கூட டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "தூங்குமூஞ்சி ஜோ பைடன், தேர்ந்தெடுக்கப்படாத அரசியல் ரவுடி குழுவிற்கும், பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். இந்த பொது மன்னிப்பு உத்தரவுகள் ஆட்டோபென்னால் பிறப்பிக்கப்பட்டவை. அவை செல்லாது.. அவரது உத்தரவுக்கு எந்த சக்தியோ அல்லது பவரோ இருக்காது எனச் சொல்லிக் கொள்கிறேன்.
பரபர குற்றச்சாட்டு
அதாவது ஜோ பைடன் அதில் கையெழுத்திடவில்லை. அவருக்குத் தெரியாமலேயே அந்த பொது மன்னிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பொது மன்னிப்பு குறித்து பைடனுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அதை அவர் அங்கீகரிக்கவும் இல்லை. இவை குறித்து பைடனுக்கு எதுவும் தெரியாது. அதிபர் பதவியில் இருந்த ஒருவருக்குத் தெரியாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு குற்றம் தான்.
எனவே, என்னையும், இன்னும் பல அப்பாவி மக்களையும் குறிவைத்து விசாரணை என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக வேட்டை நடத்திய குழு உறுப்பினர்கள் மீது மிகத் தீவிர விசாரணை நடத்தப்படும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபராக இருந்த ஜோ பைடனுக்கு தெரியாமல் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு உத்தரவின் பின்னணியில் கூட இவர்கள் இருக்கலாம்" எனக் கூட சொல்லி பகீர் கிளப்பியுள்ளார்.
அதிகாரமே இல்லையே
அமெரிக்காவில் பொதுவாக ஒரு அதிபர் பொது மன்னிப்பு வழங்கினால் அதை அடுத்து வரும் அதிபரால் நேரடியாக ரத்து செய்ய முடியாது. கடந்த காலங்களில் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டும் கூட பல முறை அதை உறுதி செய்துள்ளன. அதேநேரம் டிரம்ப் இந்த முறை நேரடியாக ரத்து செய்யவில்லை.. பைடனின் பொது மன்னிப்பு உத்தரவே போலியானது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
