அரசியல் வன்முறைக்கு இடமில்லை.. டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்கா ஜனாதிபதி பைடன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை; முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்; டிரம்ப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழரான கமலா ஹாரிஸ் இடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்கா அதிபர் வேட்பாளர் இருவரும் நேரடி விவாதங்களையும் நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஜூலை மாதம் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த கொலை முயற்சியில் டிரம்ப் வலது காதில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே மீண்டும் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேநேரத்தில் டிரம்ப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவிலை; இரு நபர்களுக்கு இடையேயான துப்பாக்கிச் சூடு நடந்தது; உடனே டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் டிரம்ப்-க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. டிரம்ப் நலமுடன் இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கமலா ஹாரீஸ்.
இதனிடையே அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு ஒரு போதும் இடம் கிடையாது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications