30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பல்வேறு ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது. அதேபோல் ஈரானிலும் மிகப்பெரிய தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் உருவாகி இருக்கிறது.

Crude Oil Iran - Israel war India Oil companies

குறிப்பாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் என்று கருதப்படுகிறது. இப்படியான சூழலில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த 30 நாட்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அதிபர் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தி இருந்தது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி வந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரானிய கச்சா எண்ணெய்யின் இரண்டாவது பெரிய கொள்முதல் நாடான இந்தியாவுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டது. இறக்குமதியைக் குறைத்து, மாற்று விநியோகஸ்தர்களை நாடுகள் கண்டறிவதே அமெரிக்காவின் நோக்கம்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, 8 நாடுகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார். அதில், கச்சா எண்ணெய் கொள்முதலில் குறிப்பிடத்தக்க குறைப்பு காட்டிய எட்டு நாடுகளுக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக்குவதே இறுதி இலக்கு என்றும் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+