நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்!
வாஷிங்டன்: ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என டிரம்ப் எச்சரிக்கையை மீறி தெஹ்ரான் உள்ளிட்ட ஈரானிய நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதமாக இஸ்ரேல் தாக்குதல் அமைந்துவிடும் என டிரம்ப் எச்சரித்து இருந்த நிலையில், இஸ்ரேல் அதனை மீறி ஈரானை தாக்கியதால் கோபம் அடைந்த டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அவரை எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போரானது 100 நாட்களை தாண்டியுள்ள நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஈரானை தாக்கிய இஸ்ரேல்
இருந்தாலும் அவ்வப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால் பதற்றம் நீடித்து வந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த ஈரான், அந்த நாட்டின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. டெல் அவிவ், ஜெருசலேம், மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வந்தன. இவற்றை இடைமறித்து இஸ்ரேல் தாக்கியது. எனினும், மத்திய இஸ்ரேல் பகுதிகளில் தான் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.
அமைதிப்பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் என்பதால், ஈரான் மீது பதிலடி கொடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலை டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இதனை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. ஈரான் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நீங்க தனித்து விடப்படுவீர்கள்
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். நீங்கள்(நெதன்யாகு) மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் மிக விரைவில் நீங்கள் தனித்துவிடப்படுவீர்கள் என்று டிரம்ப் எச்சரித்து இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் ஒரு பைத்தியம்.. நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் சிறையில் தான் இருந்து இருப்பீர்கள் என்று மிகவும் காட்டமாக பேசியிருந்தார். இந்த நிலையில்தான், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அப்செட் ஆன டிரம்ப், நெதன்யாகுவை எச்சரித்து இருக்கிறார்.
எகிறிய கச்சா எண்ணெய் விலை
மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தி வைத்து இருப்பதாலும் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டு இருப்பதாலும் அங்கு எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில், ஈரான் - இஸ்ரேல் மோதலால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 2 டாலர்கள் உயர்ந்து இருந்தது. மோதல் முற்றி வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications