பேரழிவுக்கான அறிகுறி? ஆழ்கடலில் மட்டுமே வாழும் உயிரினம் கரை ஒதுங்கியதால் அச்சம்! என்ன நடக்க போகுதோ
வாஷிங்டன்: கடலின் அடிப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கக் கூடிய துடுப்பு மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவு, இயற்கை பேரிடர் வரக்கூடிய சமயத்தில் மட்டுமே இந்த டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கும் என்று புராணக்கதைகள் கூறுவதால் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பான் கடல்பகுதியில் இந்த மீன் கள் கரை ஒதுங்கிய போது அங்கு பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அழிவை ஏற்படுத்தியதாகவும் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆழ்கடலில் மட்டும் வாழும் துடுப்பு மீன் (oarfish) ஒன்று மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. டூம்ஸ்டே மீன்கள் எனவும் இந்த வகை மீன்கள் அழைக்கப்படுகிறன. வழக்கமான மீன்களை போல இன்றி நீளமான உடல்வாகு கொண்ட ஆரஞ்சு நிறத்தில் மிளிரும் தன்மை கொண்டதாக உள்ளது. கடலின் மேல்பகுதியிலோ, கரைப்பகுதியிலோ பெரும்பாலும் தென்படாத இந்த மீன் ஆழ்கடலில் மட்டும் வசிக்க கூடியது.

இந்த துடுப்பு மீன் திடீரென கடலோரத்தில் அடித்து வரப்பட்டது அபாயமிக்க ஒன்றாக சொல்லப்படுகிறது. ஏனெனில் பேரழிவு ஏற்பட போகிறது என்றால் மட்டுமே இந்த மீன்கள் ஆழ்கடல் பகுதியை விட்டு வெளியே வருமாம். ரியுகு நோ சுகாய் (Ryugu no tsukai) என்றும் இந்த மீன்களை சொல்கிறார். இதற்கு அர்த்தம் என்னவெண்றால் கடவுளின் தூதர் என்பதாகும். ஜப்பானிய புராண கதைகளின் படி இந்த மீன்களை இவ்வாறு சொல்கிறார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் 20 க்கும் மேற்பட்ட இந்த மீன்கள் கரை ஒதுங்கின. அதே ஆண்டு ஜப்பானில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஜப்பான் வரலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி விட்டு சென்றது. எனவே தற்போது இந்த மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பேரழிவுக்கான அறிகுறி என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்
எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:- ஆழ்கடலில் மட்டும் உயிர்வாழும் இந்த உயிரினம் மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. பேரழிவு நெருங்குகிறது என்றால் மட்டுமே இந்த மீன்கள் ஆழ்கடலில் இருந்து வெளியே வரும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து பலரும் அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள்.
பருவநிலை மாற்றம் காரணமாக கால சூழல் மாறி வரும் நிலையில், ஏதேனும் பெரிய அளவில் இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதேவேளையில், சிலர் இதனை மறுத்தும் பதிவிட்டுள்ளனர். இந்த மீன் வகைகள் உயிரிழந்தாலோ, நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ, தனது இருப்பிடத்தில் இருந்து திசை திருப்பப்படாலோ இப்படி கரை ஒதுங்குவது இயல்புதான் என்று பதிவிட்டு இருக்கிறார்.
A deep-sea creature rarely seen by humans called the oarfish has washed ashore in Mexico!
— FearBuck (@FearedBuck) February 18, 2025
Legend has it that this mysterious “doomsday fish” only emerges from the ocean’s depths when disaster is near 👀
pic.twitter.com/NciJ7jbEbo
எனினும், சமூக வலைத்தளங்களில் டூம்ஸ்டே மீன்கள் குறித்து பதிவுகள் கொட்டி கிடக்கின்றன. எனினும் மீன்கள் வெளிப்பட்டாலே பேரழிவு ஏற்படும் என்பதை நிபுணர்கள் மறுத்துள்ளனர். நிபுணர்கள் கூறுகையில், "கடலின் தன்மை மாறுதல் அதாவது எல் நினோ, லா நினா ஆகியவை காரணமாக கடலில் மாற்றங்கள் ஏற்படும் போது இந்த வகை மீன்கள் அதிக அளவில் வெளியில் தென்படும். தண்ணீரின் வெட்ப நிலை, காயங்கள், நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ இவை கரை ஒதுங்க வாய்ப்புள்ளது" என்று கூறுகிறார்கள்.
தற்போது மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்க கூடிய தடுப்பு மீன்கள் 36 அடி நீளம் வரை வளரக்கூடியதாம். கடலில் 3,280 அடி (ஆயிரம் மீட்டர்கள்) ஆழத்தில் இந்த மீன்களை அதிகம் காண முடியும் எனவும் 656 அடி ஆழத்தில் கூட பெரும்பாலும் தென்படும் என்றும் புளோரிடாவில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம் கூறியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications