தோண்டி தோண்டி எடுக்க போறோம்.. பதவியேற்பில் டிரம்ப் சொன்ன அறிவிப்பு.. கவனிக்கும் அரபு நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். இதையடுத்து அவர் உரையாற்றினார். அப்போது Dril baby, Dril என்ற வார்த்தையை கூறி விளக்கம் அளித்தார். இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதோடு நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான விலை என்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் அரபு நாடுகளை அவர் குறிவைத்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

donald trump inauguration donald trump

இதையடுத்து டொனால்ட் டிரம்ப் நேற்று முறைப்படி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். நேற்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்ற விழாவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. வளமான, நம்பிக்கையான, அதேவேளையில சுதந்திரமான தேசத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளே்ன. இன்னும் வலிமையான வளமான அமெரிக்காவை உருவாக்க வேண்டும். நாட்டின் வெற்றிக்கான காலம் இது என்ற நம்பிக்கையில் இந்த பதவியை ஏற்கிறேன். இதற்கு முன்பு எப்போதும் கிடைக்காத வய்ப்பு அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது பல சவால்கள் இருந்தாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வோம். ஊழல் மிகந்த நம்பிக்கையில்லாத ஆட்சி நாட்டில் இருந்தது. அதனை சரிசெய்ய வேண்டும். உள்நாட்டு பிரச்சனையை சரிசெய்ய முடியாத நிலையை முந்தை ஆட்சி உருவாக்கி உள்ளது. அதனை மாற்ற வேண்டும். உலகில் உள்ள பைத்தியக்காரர்கள் எல்லாம் இங்கு வந்துள்ளனர். அவர்களை எல்லாம் விரட்ட வேண்டும்.

மற்றவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று சொந்த மக்களை பாதுகாக்காத அரசு நம் நாட்டில் ஆட்சியில் இருந்தது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் புயல், சூறாவளி உள்ளிட்ட பேரிடர்களாக பாதித்த மாகாணங்களை முந்தைய அரசு கைவிட்டுள்ளது. காட்டுத்தீ மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதை நாம் பார்த்துள்ளோம். பெரும் பணக்காரர்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது. நாட்டில் நிலவும் கண்ணீர் நிலை மாற வேண்டும். பேரிடர்கள் வரும்போது அதனை அமெரிக்கா தான் சிறப்பாக கையாளும் என்ற நிலை உருவாக வேண்டும்.

அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. அமெரிக்கா மக்களின் செலவை குறைக்கும் வகையில் தேசிய எரிசக்தி துறையில் அவசரநிலை அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்காவை மீண்டும் உற்பத்தி நாடாக மாற்ற வேண்டும். பூமியில் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத மிகப்பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எங்களிடம் உள்ளது. அதனை நாங்கள் பயன்படுத்த போகிறோம் என்று கூறினார். இந்த திட்டம் பற்றி டொனால்ட் டிரம்ப் பேசும்போது தான் Dril Baby,Dril என்று கூறினார்.

தற்போது உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அரபு நாடுகள் தான் முன்னணியில் உள்ளன. அதேபோல் அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் மற்றும் ரஷ்யாவிடமும் எண்ணெய் வளம் அதிக உள்ளது. தற்போது டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு அரபு நாடுகள், ஈரான், ரஷ்யாவை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் எண்ணெய், எரிசக்தி தோண்டி எடுக்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா எண்ணெய் மற்றும் காஸ் உள்ளிட்டவற்றை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பாக 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இந்த வேளையில் அமெரிக்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+