பூமியின் சரிபாதி ஆயுள் முடிஞ்சிருச்சு.. அப்போ சீக்கிரமே நெருங்கும் பேரழிவு? மிக முக்கியமான விஷயம்
வாஷிங்டன்: பூமி இப்போது அதிகாரப்பூர்வமாக நடுத்தர வயதை அடைந்துள்ளது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது கிரகம், அதன் மொத்த ஆயுளில் பாதியைக் கடந்துவிட்டதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நடுத்தர வயது என்றால் என்ன அர்த்தம்.. அப்போது சீக்கிரம் பூமி அழிந்துவிடுமா.. இந்த ஆய்வின் நோக்கம் தான் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பூமியின் தோற்றம் தொடர்பாக உலகெங்கும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து வருகிறது. பூமியின் கடந்த காலத்தை அறிந்து கொண்டால் எதிர்காலம் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்பதாலேயே இதுபோன்ற ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இப்போது இதில் சில முக்கிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடுத்தர வயது
அதாவது பூமி இப்போது நடு வயதை அடைந்துவிட்டதாம். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது கிரகம், பாதி ஆயுளைக் கடந்துவிட்டது. பூமி இன்னும் 4 முதல் 5 பில்லியன் ஆண்டுகள் வரை வாழக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சூரியன் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே பூமி இயங்கும். ஏனென்றால் பூமிக்குத் தேவையான ஆற்றலைச் சூரியன் வழங்குகிறது. எனவே, சூரியன் வெப்பமடையும்போது, பூமியின் நிலைமை படிப்படியாக மாறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த 1 பில்லியன் ஆண்டுகளில், அதிகரிக்கும் வெப்பநிலை சில உயிரினங்கள் வாழ்வதைக் கடினமாக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
எப்படி
பூமியின் வயதைக் கண்டறிய, அவர்கள் பண்டைய பாறைகளையும் விண்கற்களையும் ஆய்வு செய்தனர். யுரேனியம் போன்ற ஐசோடோப்புகளை வைத்தும் ஆய்வு செய்துள்ளனர். இதன் மூலம் சூரியன் உருவான சிறிது காலத்திற்குப் பிறகு பூமி உருவானது உறுதியாகியுள்ளது. அதாவது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றியது உறுதிப்படுத்தப்பட்டது. விண்கற்களே இந்த ஆய்வில் பூமியின் வயதைச் சரிபார்க்கும் முக்கிய ஆதாரமாக அமைந்தன.
பூமி தோன்றி பல காலம் ஆகிவிட்டதை இது குறிக்கிறது. அதேநேரம் சீக்கிரமே பூமி அழியுமோ என அச்சம் தேவையில்லை. மனிதச் செயல்பாடுகள் சுற்றுச்சூழல் மாற்றங்களை மோசமாக்காவிட்டால், பூமி இன்னும் பில்லியன் கணக்கான ஆண்டுகள் வாழக்கூடியதாகவே இருக்கும். இருப்பினும், சூரியன் படிப்படியாக வெப்பமடைந்து பிரகாசமாவதால், பூமியின் காலநிலை மாறக்கூடும்.. இதனால் சில உயிரினங்கள் அழியும்!
சூரியன்
4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியன், அணுக்கரு இணைவு (nuclear fusion) மூலம் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றி பூமிக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. இந்த எனர்ஜி தான் பூமியின் தற்போதைய நிலைக்குக் காரணமாக இருக்கிறது. சூரியன் வயதாகும்போது, அது மேலும் வெப்பமானதாக மாறும். இதனால் பூமியும் அதற்கேற்ப மாறும்.
சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயின்ட்டாக மாறுமாம். அப்போது அது விரிவடைந்து, அருகே உள்ள புதன் மற்றும் வெள்ளி கிரகங்களை விழுங்கக்கூடும். பூமி தப்பினாலும், அது வாழத் தகுதியற்ற தீப்பிடித்து எரியும் கோளாக மாறிவிடும். அதேநேரம் அது நடக்கப் பல கோடி ஆண்டுகள் உள்ளன. இப்போது பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகின்றனர்.
உணர்த்துவது என்ன
பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் எத்தனையோ உயிரினங்கள் தோன்றி அழிந்துள்ளன. மேலும், பூமியின் நிலையும் மாறியுள்ளன. அந்த காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் மனித நாகரிகம் ஒரு சிறிய "கண் சிமிட்டும்" நேரம் மட்டுமே என்பதை இது உணர்த்துகிறது.!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications