செக்ஸ் பார்ட்டி.. வசமாக சிக்கிய எலான் மஸ்க்? எப்ஸ்டீன் பைல்ஸில் வெளியான முக்கிய ஆதாரம்!
வாஷிங்டன்: பெண்களை கடத்தி, அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளி, அந்த பெண்களை பிரபலமானவர்களுடன் பழகவிட்டு காசு பார்த்தவர்தான் எப்ஸ்டீன். தற்போது அவர் தொடர்பான முக்கிய ஃபைல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் எலான் மஸ்க் பெயர் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே இந்த ஃபைல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வெளியான ஃபைல்களில் சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 1,80,000 படங்கள் அடங்கியுள்ளன. எப்ஸ்டீன் குறித்து அரசு வசம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என்ற சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, இதுவே மிகப்பெரிய ஆவண வெளியீடாகும்.

எலான் மஸ்க் பெயர்
இந்த ஆவணங்களில் உலகின் பணக்காரரான எலான் மஸ்க், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, மற்றும் பீட்டர் மேண்டல்சனின் கணவர் ஆகியோர் பற்றிய தகவல்கள் அடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தகவல்கள் பல்வேறு நபர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான உறவுகள் குறித்த முன்பு அறியப்படாத விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.
சமீபத்திய ஆவணங்களில், இளவரசர் ஆண்ட்ரூ ஒரு படுக்கையில், ஒரு பெண் மீது நிமிர்ந்து குனிந்தபடி, கைகளால் தரையில் ஊர்ந்து செல்லும் படங்கள் உள்ளதாகத் தெரிகிறது. ஒரு படத்தில், முன்னாள் இளவரசர் அந்தப் பெண்ணின் வயிற்றில் கை வைத்திருப்பது போலவும் உள்ளது. அந்தப் பெண்ணின் முகத்தை மறைக்கும் வகையில் மங்கலாக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் ஒரு பகுதியாகும்.
இளவரசர் ஆண்ட்ரூ
ஜெஃப்ரி எப்ஸ்டீன், வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, அவரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திக்க இளவரசர் ஆண்ட்ரூ அழைப்பு விடுத்ததாகவும் இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதியிட்ட ஒரு ஆவணத்தில், எப்ஸ்டீன் லண்டனில் தங்கியிருந்தபோது ஆண்ட்ரூவைத் தொடர்புகொண்டதைக் காட்டுகிறது.
அதில், "உங்களுடன் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள். நமக்கு தனிமை வேண்டும்" என்று இளவரசர் குறிப்பிட்டிருக்கிறார். சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் 13 மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு 2010ம் ஆண்டு ஆகஸ்டில் எப்ஸ்டீன் விடுவிக்கப்பட்ட உடனேயே இந்த சம்பவம் நடந்தது.
அரண்மனைக்கு அழைத்து வரப்பட்ட ரஷ்ய பெண்
இத்துடன் இந்த மெயில் பரிமாற்றங்கள் நிற்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அனுப்பிய மின்னஞ்சலில், நீங்கள் பக்கிங்ஹாம் பேலஸ் வருவதில் மகிழ்ச்சி. யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம். மாலை 4 மணி முதல் 8 மணி வரை நான் அங்கு இருப்பேன்" என்று இளவரசர் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாலியல் குற்றவாளியை, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான அரண்மனைக்கே அழைத்து, அதுவும் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்
மற்றொரு மின்னஞ்சல் உரையாடலில், ஒரு 26 வயது ரஷ்யப் பெண்ணுடன் ஆண்ட்ரூ இரவு உணவு அருந்துவதற்கு எப்ஸ்டீன் ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்தப் பெண்ணைச் சந்திப்பதில் தான் "மகிழ்ச்சி" அடைவதாக ஆண்ட்ரூ பதிலளித்துள்ளார். எப்ஸ்டீனிடம் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தது மட்டுமின்றி, எப்ஸ்டீன் தன்னைப் பற்றி அந்தப் பெண்ணிடம் என்னவெல்லாம் சொல்லி அறிமுகப்படுத்தினார்? என்பதையும் ஆண்ட்ரூ தெரிந்து கொள்ள விரும்பியுள்ளார்.
நேற்று வெளியான புகைப்படங்களில், ஆண்ட்ரூ ஒரு பெண்ணின் மீது மண்டியிட்டு குனிந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அந்தப் பெண்ணை அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினாரா அல்லது அது ஒரு சாதாரண விளையாட்டா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சையில் எலான் மஸ்க்
உலகின் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு எப்ஸ்டீனுடன் முன்பு அறியப்பட்டதை விடவும் விரிவான, மேலும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததை வெள்ளிக்கிழமை வெளியான மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆவணங்களில் உள்ள மின்னஞ்சல்கள், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மஸ்க், எப்ஸ்டீனின் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவிற்குச் செல்வதற்கான திட்டங்கள் குறித்து இருவரும் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டதைக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த இரண்டு சந்திப்புகளும் நடக்கவில்லை என்று தெரிகிறது.
செயின்ட் ஜேம்ஸ் தீவு என்பது சாதாரண ஒன்று கிடையாது. அதுதான் எப்ஸ்டீனின் ரகசிய தீவு. அங்குதான் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் தொழிலாளியாக இருக்க வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications