"உலகின் பணக்கார மனிதர்.." எலான் மஸ்க் கம்பேக் எல்லாம் ஓகே! ஆனா ட்விட்டரை பாருங்க.. ரொம்ப பரிதாபம்!
வாஷிங்டன்: உலகின் பணக்கார மனிதர் என்ற பெயரை டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் பெற்றுள்ளார். அதேநேரம் ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து அவருக்குக் கெட்ட செய்தியும் கிடைத்தே உள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பிஸ்னஸ்மேன்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்.... இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இவரது சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வந்தது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அடுத்தடுத்து இவருக்குக் கிடைத்த சக்ஸசே இதற்குக் காரணமாகும்.

ட்விட்டர்: இதனால் இவரது சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தே வந்தது.. அதேநேரம் கடந்தாண்டு இவருக்குச் சற்று மோசமாகவே இருந்தது. அவரது சொத்து மதிப்பு கடுமையாகச் சரிந்தது. அதிலும் குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. இதனால், இவரது சொத்து மதிப்பு மளமளவென குறைந்தது. கடந்தாண்டு மட்டும் இவர் பல பில்லியன் டாலரை இழந்திருந்தார்.
இதனால் உலகின் டாப் பணக்காரர் என்ற பெயரையும் கடந்தாண்டு அவர் இழந்திருந்தார். இதற்கிடையே அவர் இப்போது வலுவான ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இப்போது உலகின் டாப் பணக்காரர் என்ற பெயரை எலான் மஸ்க் பெற்றுள்ளார்..
அர்னால்ட்: கடந்த சில மாதங்களாக பெர்னார்ட் அர்னால்ட் என்ற பிராஞ்ச் தொழிலதிபரே உலகப் பெரும் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார். அர்னால்ட் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை பாரிஸ் பங்குச்சந்தையில் 2.6% சரிந்தது. இதனால் அர்னால்ட் சொத்து மதிப்பில் சில பில்லியன் டாலரை இழந்த நிலையில், உலகின் டாப் பணக்காரர் என்ற பெயரை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
உலகின் 500 பணக்காரர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் எப்போதும் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டு டாப் இரண்டு இடங்களில் எலான் மஸ்க் மற்றும் 74 வயதான அர்னால்ட் இருந்தனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், சொத்து மதிப்பில் சில பில்லியன் டாலரே வித்தியாசமாக இருந்தது. இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் அர்னால்டை ஓவர்டேக் செய்துள்ளார்.
எலான் மஸ்க் கம்பேக்: கடந்தாண்டு டிசம்பர் மாதம் தான் அர்னால்ட் முதல்முறையாக எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளியிருந்தார். அப்போது எலான் மஸ்கின் பல நிறுவனங்கள் பொருளாதார ரீதியாகப் பிரச்சினையைச் சந்தித்தது. அதேநேரம் ஆடம்பர பொருட்களை விற்கும் அர்னால்டின் நிறுவனத்தின் லாபம் பணவீக்கத்தால் அதிகரித்தது. இதன் மூலமே அவர் டாப் பணக்காரர் என்ற இடத்தை பிடித்திருந்தார்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைத்து நாடுகளிலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மந்த நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் ஆடம்பர நிறுவனங்களின் விற்பனை சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் குறைந்தே வருகிறது. இதனால் அர்னால்ட் நிறுவனங்களின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரது பங்குகள் சுமார் 10% சரிந்தன. இதன் மூலம் ஒரே நாளில் அர்னால்ட் தனது சொத்து மதிப்பில் $11 பில்லியனை ஒரே நாளில் இழந்தார்.
மறுபுறம் எலான் மஸ்க் இந்த ஒரே ஆண்டில் மட்டும் 55.3 பில்லியன் டாலரை சேர்த்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லா தான். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 66% அதிகரித்துள்ள நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் பயங்கரமாக அதிகரித்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு இப்போது 192.3 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம் அர்னால்டின் சொத்து மதிப்பு இ்பபோது 186.6 பில்லியன் டாலராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கெட்ட செய்தி: அதேநேரம் மஸ்கின் அனைத்து நிறுவனங்களும் அவருக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை. குறிப்பாக ட்விட்டர் நிறுவனம் கடும் நஷ்டத்தை அவருக்கு கொடுத்துள்ளது. கடந்தாண்டு அவர் $44 பில்லியன் டாலரை கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருந்தார். ஆனால், அதன் பின்னர் ட்விட்டரில் நடக்கும் விஷயங்கள் நன்றாக இல்லை.
இதனால் அதன் மதிப்பு சரசரவென சரிந்தே வருகிறது.. இதற்கிடையே எலான் மஸ்க் ட்விட்டருக்கு கொடுத்த விலையில் இப்போது மூன்றில் ஒரு பங்காக மட்டுமே அதன் மதிப்பு உள்ளதாக பிடெலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் போதே, அதற்கு அவர் அதிக விலை கொடுப்பதாகப் பலரும் விமர்சித்திருந்தனர்.. இப்போது அவர் உலகின் டாப் பணக்காரராக மாறியிருந்தாலும் ட்விட்டர் மூலம் அவருக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications