டிரம்பை டிஸ்மிஸ் செய்யுங்க.. அதிபர் பதவிக்கு "அவர்" தான் சரி! பெரிய குண்டை வீசிய எலான் மஸ்க்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவருக்குப் பதிலாகத் துணை அதிபராக உள்ள வான்ஸை அதிபர் பதவியில் கொண்டு வர வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நண்பர்களாக இருந்த டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்துள்ளது. டிரம்பின் தி பியூட்டிபுல் பில் என்ற மசோதாவை அருவருப்பானது என்றெல்லாம் எலான் மஸ்க் விமர்சித்திருந்ததே இதற்குப் பிரதான காரணமாகும். எலான் மஸ்க் கருத்துக்கு டிரம்ப் பதிலளித்த நிலையில், அவை சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

எலான் மஸ்க்
இதற்கிடையே டிரம்ப் மீது எலான் மாஸ்க் தாறுமாறாக பல்வேறு புகார்களைச் சாடி வருகிறார். இதற்கிடையே எலான் மஸ்க் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரிபோஸ்ட் செய்துள்ளது ஒரு ட்வீட் தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யணும்
அதாவது நெட்டிசன் ஒருவர் ஒரு ட்வீட்டில், "அதிபர் vs எலான். யார் வெற்றி பெறுவார்கள்? நான் எலான் மஸ்க் தான் வெல்வார் எனச் சொல்கிறேன்.. டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.. அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் அதிபராகப் பதவியேற்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார். அந்த போஸ்ட்டை ரீட்வீட் செய்தி எலான் மஸ்க் ஆம் என்று மட்டும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக எலான் மஸ்க் தான் மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை என்றால் டொனால்ட் டிரம்பால் அதிபர் தேர்தலிலேயே கூட வென்றிருக்க முடியாது என்றும் விமர்சித்திருந்தார். இந்தச் சூழலில் தான் டிரம்பை பதவிநீக்கம் செய்துவிட்டு வான்ஸை அதிபராகக் கொண்டு வர வேண்டும் என சாடியுள்ளார்.
மாறி மாறி விமர்சனம்
இது மட்டுமின்றி டிரம்ப் மீது எலான் மஸ்க் பல்வேறு புகார்களைச் சரமாரியா முன்வைத்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும் இதன் காரணமாகவே அந்த ஆவணங்களை டிரம்ப் பொது வெளியில் வெளியிடவில்லை எனச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர், "உண்மையிலேயே பெரிய குண்டை வீச வேண்டிய நேரம் இது: எப்ஸ்டீன் விசாரணை கோப்புகளில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருக்கிறது. அந்த பைஃலை ரிலீஸ் செய்யாமல் இருக்க அதுவே காரணம்" என்று பதிவிட்டிருந்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது கடந்த 2005ல் புகார்கள் எழுந்தன. கரீபியனில் அவரது 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' தீவில் இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாடு எழுந்தது. 2008ல் இந்த குற்றச்சாட்டில் எப்ஸ்டீனுக்கு தண்டனை கிடைத்தது. இருப்பினும், அவர் விரைவில் விடுவிக்கப்பட்டார். பின்னர், 2019ல் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அதே ஆண்டு நியூயார்க்கில் உள்ள சிறையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வெளியில் வரும் என்பதால், அவரை சிறையிலேயே கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அதேநேரம் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் பல முக்கிய பிரபலங்களின் பெயர்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது எப்ஸ்டீன் பல முக்கிய பிரபலங்களைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாகவும் புகார்கள் உள்ளன. இருப்பினும், அந்த ஆவணங்கள் வெளியிடப்படவில்லை. இந்த
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications