கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் "தப்பான" உறவு?.. தீயாக பரவிய செய்தி.. கொதித்து போன எலான் மஸ்க்!
வாஷிங்டன்: கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் ரகசிய உறவு வைத்திருந்ததாக பரவிய தகவலுக்கு தற்போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு இறுதியில் தனது காதலியும் பிரபல பாடகியுமான கிரீம்ஸை பிரிவதாக அறிவித்தார்.
திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

விவாகரத்து கோரி முறையீடு
இதைத்தொடர்ந்து, தனது நியூரோலிங்க் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஷிவான் சில்ஸ் என்பவருடன் காதல் வயப்பட்டு இரண்டு குழந்தைகளுக்கு எலான் மஸ்க் தந்தையானதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக செய்தி வெளியாகியது. இதுபோன்ற மன்மத விளையாட்டுகளில் ஈடுபட்டு அடிக்கடி செய்திகளில் சிக்கும் எலான் மஸ்க் தற்போது, தனது நெருங்கிய நண்பரும் கூகுள் இணை நிறுவனருமான செர்ஜி பிரின் மனைவியுடன் ரகசிய உறவு வைத்திருந்தாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தனது மனைவியை பிரிந்து வாழ்ந்த செர்ஜி பிரின், கடந்த ஜனவரியில் விவாகரத்து கோரி முறையிட்டுள்ளார்.

எலான் மஸ்க் கெஞ்சினாரா?
இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மியாமி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது எலான் மஸ்க்கிற்கும் கூகுள் இணை நிறுவனரின் மனைவியாக இருந்த ஷனஹன் உடன் தொடர்பு ஏற்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தனது நடத்தைக்காக செர்ஜி பிரின் முன்பாக மண்டியிட்டு தன்னை மன்னித்துவிடுமாறு எலான் மஸ்க் கெஞ்சியதாகவும் செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இந்த செய்திகள் நெட்டிசன்களுக்கு வெறும் வாயில் அவல் கிடைத்தது போல ஆகிவிட்டது. இது தொடர்பான கருத்துக்கள் விவாதங்கள் என இணையத்திலும் நெட்டிசன்கள் விவாதித்தனர்.

ரொமாண்டிக் நடக்கவில்லை
இந்த நிலையில், எலான் மஸ்க் தனது ட்விட்டரில் இத்தகைய தகவலை முற்றிலும் மறுத்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எலான் மஸ்க் கூறியிருப்பதாவது:- தற்போது வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது, முட்டாள்தனமானது. நானும் செர்கேவும் நல்ல நண்பர்கள். நேற்று இரவு கூட ஒரு பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டோம். நிக்கோல் ஷனாஹனை மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். இந்த சந்திப்பின் போது எங்களை சுற்றி பலரும் இருந்தனர். ரொமாண்டிக்காக எதுவும் அங்கு நடக்கவில்லை. என்று பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

உதவிய செர்ஜி பிரின்
அமெரிக்காவில் கடந்த 2008-ம் ஆண்டு பொருளாதார மந்த நிலையில் சிக்கிய போது, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு $500,000 டாலர்கள் கொடுத்து செர்ஜி பிரின் உதவியுள்ளார். அதேபோல், டெஸ்லா நிறுவனம் தனது காரை உற்பத்தி செய்து முடித்த பிறகு முதன் முதலாக செர்ஜி பிரின் உள்ளிட்ட சில நபர்களுக்குத்தான் வழங்கியது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினுக்கும் பல ஆண்டுகளாக நல்ல நட்புடன் இருந்து வந்திருக்கிறர் என்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications