"எலான் மஸ்க்கை மயக்கி கர்ப்பமாக போகிறேன்" சமூக வலைத்தள பிரபலத்தின் சாட் லீக்! இப்படியும் செய்வாங்களா
வாஷிங்டன்: அமெரிக்காவை வலதுசாரி சமூக வலைத்தள பிரபலம் ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர் எலான் மஸ்கின் 12வது குழந்தையைத் தான் பெற்றெடுத்துள்ளதாகச் சொல்லி பகீர் கிளப்பினார். இதற்கிடையே மற்றொரு சமூக வலைத்தள பிரபலமான இசபெல்லா மூடி என்பவர் ஆஷ்லே செயின்ட் திட்டமிட்டு எலான் மஸ்கை மயக்கி ஏமாற்றியுள்ளதாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் சில ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ட்விட்டர் என ஏகப்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

சமூக வலைத்தள பிரபலம்
இத்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர் கடந்த வாரம் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பினார். தான் எலான் மஸ்கின் 12ஆவது குழந்தையை பெற்றெடுத்ததாகவும் எலான் மஸ்க் தனக்கு உரியப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று அவர் கூறியது பரபரப்பைக் கிளப்புவதாக இருந்தது. மேலும், குழந்தையைத் தானே வளர்க்கப் போவதாக அறிவித்துள்ள ஆஷ்லே இது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே அங்குள்ள மற்றொரு வலதுசாரி சமூக வலைத்தள பிரபலமான இசபெல்லா மூடி என்பவர் கடந்தாண்டு ஆஷ்லே செயின்ட் கிளேர் உடன் நடத்திய சாட்டின் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "இது எங்கள் தனிப்பட்ட சாட்கள்.. இதை நான் பொதுவெளியில் பகிர விரும்பவில்லை. இருப்பினும், ஆஷ்லே மட்டும் எலான் மஸ்க் உடனான தனது தனிப்பட்ட சாட்களை பகிர்ந்துவிட்டு பிரைவசி வேண்டும் என்கிறார். அவரது திட்டத்தை இது அம்பலப்படுத்தும்" என்று பதிவிட்டு அந்த ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார்.
லீக்கான சாட்
இந்த சாட் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. தனக்கு எலான் மஸ்க் உடன் குழந்தை வேண்டும் என ஆஷ்லே கூறுகிறார். அந்த மெசேஜ்ஜில், "எலான் மஸ்க் என்னைப் பாலோ செய்கிறார். எனக்கு அவருடன் குழந்தைகள் வேண்டும். நான் எலான் உடன் வெளியே செல்கிறேன். அவரை மயக்கி, என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு சாட்டில் எலான் மஸ்கை எப்படி மயக்கலாம் என்று ஐடியோவும் கேட்கிறார்.
கடந்த வாரம் எப்படி ஆஷ்லேவின் ட்வீட்கள் இணையத்தில் டிரெண்டானதோ.. அதேபோலத் தான் இப்போது இசபெல்லாவின் இந்த ட்வீட்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எலான் மஸ்கை பிளாக் மெயில் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆஷ்லே இதுபோல அவரை மயக்கி இருப்பதாகப் பலரும் சாடி வருகிறார்கள்..
அதே பதில்
இசபெல்லாவின் ட்வீட் இணையத்தில் டிரெண்டான நிலையில், எலான் மஸ்க் நேரடியாக இதற்குப் பதிலளித்துள்ளார். இசபெல்லா ட்வீட்டிற்கு நான்கே லெட்டரில் "Whoa" என்று மட்டும் பதிலளித்திருக்கிறார். முன்னதாக ஆஷ்லே கர்ப்பம் தொடர்பான செய்திக்கும் எலான் மஸ்க் இதேபோல "Whoa" என்று மட்டும் பதில் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்கின் குழந்தைகள்
எலான் மஸ்கிற்கு மூன்று பெண்களுடன் 12 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியான ஜஸ்டின் வில்சனுடன் இரட்டையர்களான விவியன் & கிரிஃபின் மற்றும் காய், சாக்சன் மற்றும் டாமியன் என மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அடுத்து இசைக் கலைஞர் க்ரைம்ஸுடன் எக்ஸ், எக்ஸா டார்க் சைட்ரேல் மற்றும் டெக்னோ மெக்கானிக்கஸ் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். அதேபோல நியூராலிங்க் நிறுவனத்தில் வேலை செய்யும் ஷிவோன் ஜிலிஸ் என்ற பெண்ணுடன் ஸ்ட்ரைடர் மற்றும் அஸூர் என்ற இரட்டையர்கள் உள்ளனர்.
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications