அமெரிக்கா காலியாக போகுது.. எலான் மஸ்க்கின் தந்தை கொடுத்த வார்னிங்! எவ்வளவு வன்மம் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது பாதிப்பை சந்தித்திருக்கிறது. இப்படி இருக்கையில், சீக்கிரமே அமெரிக்கா வீழ்ச்சியடையும் என்று எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் வார்னிங் கொடுத்திருக்கிறார். இது எப்படி நடக்கும் என்றும் அவர் விரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா இன்று இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது எனில், அதற்கு மற்ற நாடுகளில் இருந்து சென்ற புலம்பெயர் உழைப்பாளிகள்தான் மிகப்பெரிய காரணம். ஆனால், அமெரிக்காவின் இனவெறியர்கள் இந்த புலம்பெயர் மக்களை விரோதிகளாகவே பார்க்கின்றனர். அவர்கள் உருவாக்கிய செல்வம் வேண்டும், அவர்கள் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

Elon Musk US America

அமெரிக்காவை விட்டு வெளிநாட்டினரை, வெள்ளையர் அல்லாதவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோன்ற கருத்தைதான் தற்போது எரோல் மஸ்க் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வெள்ளையர்களும் அமெரிக்காவும்

"அமெரிக்காவில் அடுத்த 20 ஆண்டுகளில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை சரிந்தால், நிச்சயம் அமெரிக்கா வீழ்ச்சியடையும். இது ஒரு மோசமான நிகழ்வாக இருக்கும். அமெரிக்கா வீழ்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு தொழில்நுட்பம் பிடிக்கவில்லையா? நீங்கள் மீண்டும் காட்டுக்கே செல்ல விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வீழும் அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த 2020ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, வெள்ளையர்களின் எண்ணிக்கை 57.8% ஆக இருக்கிறது. 2010ல் இந்த எண்ணிக்கை 63.7% ஆக இருந்தது. இப்படியே போனால் 2045ல் அமெரிக்காவில் வெள்ளையினத்தவர்களை விட மற்ற இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இப்படி நடந்தால் அமெரிக்கா வீழ்ச்சியடையும் என்று எரோல் எச்சரித்துள்ளார்.

இனவெறி கருத்து

தனது கருத்துக்கு தென்னாப்பிரிக்காவை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். "தென்னாப்பிரிக்காவை பாருங்கள். அங்கு வெள்ளையர்கள் இருந்தார்கள். இன்று தென்னாப்பிரிக்கா இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறது எனில், அதற்கு காரணம் வெள்ளையர்கள்தான். அவர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பிரதிபலித்தார்கள். இதனால்தான் தென்னாப்பிரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் அடக்குமுறையில் ஈடுபட்டார்கள் என்று சொல்வது முட்டாள்தனம்" என்று தனது இனவெறி கருத்தை கக்கியிருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர், டெஸ்லா, x, ஸ்பேஸ் எக்ஸ் என பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் எலான் மஸ்க். அவரின் தந்தை இப்படி இனவெறி கருத்தை வெளிப்படுத்தி இருப்பது அமெரிக்காவில் ஏழரையை கூட்டியிருக்கிறது.

தந்தையும் மகனும்

என்னதான் தனது தந்தை இவ்வளவு வன்மமாக பேசினாலும், அந்த கருத்துடன் எலான் மஸ்க் உடன்படவில்லை. பல நேரங்களில் தனது தந்தையை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருக்கிறார். "எனது தந்தை தீயவர். அவர் அளக்கவே முடியாத அளவுக்கு கொடூரமான குற்றங்களை செய்திருக்கிறார். எப்போதும் தீய எண்ணங்களுடன் திட்டங்களை வகுப்பவர். ஒரு முறை என் வீட்டிற்குள் புகுந்து 3 பேரை சுட்டு கொன்றிருக்கிறார். நாங்கள் அவரை நல்வழிப்படுத்த எவ்வளவோ முயன்றோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை" என்று மஸ்க் கூறியிருக்கிறார்.

மஸ்க்குக்கும், எரோலுக்கும் இடையிலான உறவு இப்படித்தான் இருக்கிறது. எரோல் இனவாத கருத்துக்களை பேசுவதால், அவரிடமிருந்து மஸ்க் விலகிதான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+