வடகொரியாவுக்கு வந்த சோதனை! ஆக்ஷனில் இறங்கிய கிம்.. அதிகாரிகளுக்கு கொடுத்த ஆர்டர் இதுதான்!
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வடகொரியாவில் தற்போது உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வடகொரியாவில் தற்போது உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வடகொரியாவில் உணவுப்பஞ்சம் என்று தகவல் வெளியாகி வருவது வாடிக்கைதான் என்றாலும் இந்த முறை அதிபர் கிம் ஜாங் அன் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பது அங்கு நிலவும் கடுமையான பஞ்சத்தை காட்டும் வகையில் உள்ளது.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது அந்த நாட்டு மக்களுக்கே வெளிச்சம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு நடைபெறும் எந்த ஒரு விஷயமும் வெளி உலகத்திற்கு தெரியாது.
அது மட்டும் கிடையாது பல சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற நாடாக வடகொரியா உள்ளது. அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்.

11 நாட்களுக்கு சிரிக்க கூடாது
வடகொரியா வினோதமான உத்தரவுகள் மற்றும் தண்டனைகளுக்கு விதித்து தனது அணு ஆயுத சோதனை போலவே உலக நாடுகளை அதிர வைக்கும். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் கிம் ஜாங் அன்னின் தந்தையும், அந்த நாட்டின் முன்னாள் தலைவருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என வினோதமான உத்தரவை வெளியிட்டு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே
சமீபத்தில் கூட தனது மகளின் பெயரை வேறு யாரும் வைக்கக் கூடாது என்று கிம் ஜாங் அன் உத்தரவிட்டு இருந்தார். அதேபோல், மேற்கத்தியக் கலாச்சாரம் பரவுவதைத் தடுக்க நோக்கில் ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே பெற்றோருக்கும் குழந்தைக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்து வடகொரிய மக்களுக்கு ஷாக் கொடுத்தது. உள்நாட்டில் ஆட்சி இப்படியென்றால் சர்வதேச அளவில் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சண்டையிட்டு கடும் பொருளாதார தடைகளை வாங்கி வைத்துள்ளது.

அதிகரித்த உணவு பஞ்சம்
இதனால் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வடகொரியாவில் தற்போது உணவு பஞ்சமும் தலைவிரித்தாடுகிறதாம். அவ்வப்போது வடகொரியாவில் உணவுப்பஞ்சம் என்று தகவல் வெளியாகி வருவது வாடிக்கைதான் என்றாலும் இந்த முறை அதிபர் கிம் ஜாங் அன் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பது அங்கு நிலவும் கடுமையான பஞ்சத்தை காட்டும் வகையில் உள்ளது. உணவு பஞ்சம் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்த கிம் ஜாங் அன், விவசாய உற்பத்தி செயல் முறையை மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது முதல் முறை கிடையாது
மேலும் விவசாய உற்பத்தி சார்ந்து தீவிர மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதும் தான் நமது இலக்குளை அடைய முடியும் என கிம் ஜாங் அன் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 1990 களில் வடகொரியாவில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு இருந்தது. இந்த உணவு பஞ்சம் காரணமாக சுமார் 2.50 லட்சம் பேர் உயிரிழந்த கொடுமையும் நடைபெற்றது.

கொஞ்சம் கூட குறைக்காமல்..
இந்த உணவு பஞ்சங்களில் இருந்து பாடம் கற்காத வடகொரியா தொடர்ந்து தனது அடாவடி போக்கில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான பஞ்சம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனைகளை கொஞ்சம் கூட குறைக்காமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா இத்தகைய சோதனைகளை நடத்தி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications