இந்தியாவுக்கு நன்றி! பாகிஸ்தானில் இறங்கி அடித்த இந்தியா! தழுதழுத்தபடி அமெரிக்காவிலிருந்து வந்த குரல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே திடீரென இதற்கு நன்றி சொல்லி அமெரிக்காவில் இருந்து ஒரு குரல் வந்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவின்ஆபரேஷன் சிந்தூரில் பல்வேறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர். அதில் குறிப்பாக மசூத் அசாரின் இளைய சகோதரனான அப்துல் ரவூப் அசார் என்பவனும் கொல்லப்பட்டான். இவன் தான் 1999ல் கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவன்.

Father of American reporter affected by pakistan thanks India for neutralizing Abdul Rauf Azhar

அமெரிக்காவில் இருந்து வந்த குரல்

இதற்கிடையே ரவூப் அசார் கொல்லப்பட்டதற்கு நன்றி சொல்லி அமெரிக்காவில் இருந்து ஒரு குரல் வந்துள்ளது. ஜூடியா பெர்ல் என்பவர் தான் இதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஜூடியா பெர்லின் மகன் பாகிஸ்தானில் கடத்தி கொல்லப்பட்ட நிலையில், அதற்கு ரவூப் அசாரும் முக்கிய காரணம். இதன் காரணமாகவே ஜூடியா பெர்ல் நன்றி சொல்லியுள்ளார்.

இது தொடர்பாக ஜூடியா பெர்ல் தனது ட்விட்டரில், "எனது மகன் டேனியலை கடத்தி கொலை செய்த அப்துல் ரவூப் அசார் என்பவரை இந்தியப் பாதுகாப்புப் படைகள் கொன்றதாகத் தகவல்கள் வந்துள்ளன. என்னைத் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி

அசார் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவர். எனது மகன் டேனியலை கடத்தியதில் ஜெய்ஷ் முகமது தீவிரவாத குழு நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், அதுவே மறைமுகமாகப் பொறுப்பாக இருந்தது. டேனியலை கடத்திய ஒமர் ஷேக் என்பவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படக் காரணமாக இருந்த (கந்தஹார் விமான) கடத்தலை நடத்தியதே அசார் தான்.

எனது மகனைக் கொன்றதற்காக ஷேக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.. ஆனால் திடீரென அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அரசு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டன. இவை அனைத்தும் வேதனையான ஒரு செய்தி. இப்போது அசார் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. புரிதலுக்கும் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.. டேனியலின் வாழ்க்கை நாம் யார்.. எதற்காக நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Father of American reporter affected by pakistan thanks India for neutralizing Abdul Rauf Azhar

என்ன நடந்தது

அதாவது அப்துல் ரவூப் அசார் நேரடியாகச் செய்தியாளர் பெர்ல் மரணத்திற்குக் காரணம் இல்லை. ஆனால், மறைமுகமாக அவனும் ஒரு முக்கிய காரணம். அதாவது 1999 டிசம்பரில் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. இந்தக் கடத்தலைத் திட்டமிட்டு நடத்தியது அந்த அப்துல் ரவூப் அசார் தான். அந்த விமானத்தைத் தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானுக்குக் கூட்டிச் சென்றனர்.

விமானப் பயணிகளைப் பாதுகாப்பாக விடுவிக்க அல்-கொய்தா தீவிரவாதி உமர் சயீத் ஷேக் விடுவிக்க வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளனர். அப்போது மற்றொரு தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த உமர் சயீத் ஷேக் இந்தியச் சிறைகளில் தான் இருந்தார். பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க வேறு வழியில்லாமல் உமர் சயீத் ஷேக் விடுவிக்கப்பட்டார். உடனே பாகிஸ்தானுக்குத் தப்பி சென்ற உமர் சயீத் ஷேக் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டார். அப்படித் தான் டேனியல் பெர்லும் கடத்தி கொன்றான்.

யார் இந்த டேனியல் பெர்ல்?

டேனியல் பெர்ல் என்பவர் அமெரிக்காவின் பிரபல தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளர் 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இரட்டைக் கோபுரத் தாக்குதலை நடத்தியிருந்தனர். அது தொடர்பாகச் செய்தி சேகரிக்க பெர்ல் பாகிஸ்தானின் கராச்சி நகருக்குச் சென்றுள்ளார். அங்குத் தீவிரவாதிகள் குறித்து விரிவான செய்திகளைச் சேகரித்து வந்துள்ளார். பாகிஸ்தான் எப்படி வெளிப்படையாகத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது என்பதையெல்லாம் அம்பலப்படுத்தும் ஆதாரத்தைச் சேகரித்து வந்தார்.

கடத்தி படுகொலை

இது தொடர்பாக ஒரு நேர்காணல் எடுக்கச் சென்றபோது திட்டமிட்டு டேனியலை கடத்தினர். உடனே அவரை தேடும் பணிகளைத் தொடங்குவதாக பாகிஸ்தான் போலீஸ் சொன்னாலும் சில நாட்கள் டேனியலை பற்றி எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை. அப்போது தான் தீவிரவாதிகள் திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் டேனியலை கட்டாயப்படுத்தி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் உரையை வாசிக்க வைத்தனர். பிறகு அந்த வீடியோவிலேயே அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்கச் செய்தியாளரின் இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணமாக இருந்தவன் தான் உமர் சயீத்.. இந்தியச் சிறைகளில் கம்பி எண்ணிக் கொண்டிருந்த அவனை விடுவிக்கக் காரணமாக இருந்ததே அப்துல் ரவூப் அசாரின் கந்தஹார் விமானக் கடத்தல் தான். இதன் காரணமாகவே இப்போது டேனியலின் தந்தை ஜூடியா பெர்ல் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+