"என்னால ஒன்னுமே பண்ண முடியல..!" சொந்த பிள்ளைகளை கண் முன்னே இழந்த தீயணைப்பு வீரர்! பரிதாபம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்ட கோரமான தீ விபத்து ஒன்றில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார், தீயணைப்புத் துறையினர், ராணுவம் போல நம்மைப் பாதுகாப்பும் பணிகளில் ஈடுபடுவோர், அவர்களின் சொந்த குடும்பத்தினர் உடன் செலவழிக்கும் நேரம் ரொம்பவே குறைவு தான்.
அவர்களுக்கு 24*7 எப்போதும் வேலை இருக்கும் என்பதால், பெற்ற குழந்தைகள் உடன் கூட குறைவான நேரத்தையே செலவிடுவார்கள். குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் போகும்!

அமெரிக்கா
அப்படியொரு சோக சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் வீடு ஒன்றில் தீப்பிடித்து எரிவதாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவல் கேட்ட உடன் அப்பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். இருப்பினும், தீ அதற்குள் மளமளவெனப் பரவிவிட்டது.

தீயணைப்பு வீரர்
தீ குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற தீயணைப்பு வீரர்களில் ஒருவர் ஹரோல்ட் பேக்கர். சம்பவ இடத்திற்கு வந்த போது, அவர் ஒரு நொடி நடுங்கிவிட்டார். ஏனென்றால் பற்றி எறிந்து கொண்டு இருந்த அந்த வீட்டில் தான், அந்த தீயணைப்பு வீரர் ஹரோல்ட் பேக்கரின் மகன்கள் இருந்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரோல்ட் பேக்கர், எப்படியாவது தனது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என முயன்றுள்ளார்.

புலம்பல்
இதற்காக அவர் பற்றி எரியும் வீட்டிற்குள்ளும் கூட பல முறை செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், வீடு மிக மோசமான நிலையில் எரிந்து கொண்டிருந்ததால், உள்ளே சென்றால் அவரது உயிருக்கும் ஆபத்து என்பதால் ஹரோல்ட் பேக்கரை அவரது சக ஊழியர்கள் உள்ளே விடவில்லை. தீ குறித்த செய்தி கிடைத்த உடன் மிக வேகமாகச் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் இருப்பினும் தனது பிள்ளைகள் உட்பட யாரையும் காப்பாற்ற முடியவில்லை ஹரோல்ட் பேக்கர் வேதனையுடன் புலம்பி உள்ளார்.

10 பேர் பலி
தீயணைப்புத் துறையினர் அங்குச் செல்லும் முன்பு, அந்த இரண்டு மாடிக் கட்டிடம் முற்றிலுமாக நாசமடைந்துவிட்டது. தீ விபத்தால் மிக மோசமாக அந்த வீடு சேதம் அடைந்து உள்ளது. இந்த கோரமான தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மூன்று பேர் தீ பரவுவதற்கு முன்னர், வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டனர். இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications