மீன் மழை ஆச்சரியம்.. வானத்தில் இருந்து பெய்யும் அதிசய உண்மை இதுவே.. மீன்கள் மழையில் விலகிய மர்மம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆலங்கட்டி மழை, கனமழை போன்றவற்றை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் வானத்திலிருந்து மீன்கள் மழையாக விழுவது என்றால் அது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட விசித்திரமான இயற்கை நிகழ்வு உலகின் பல பகுதிகளில் நடந்துள்ளது. நம்முடைய கேரளா, தெலுங்கானாவில் நடந்துள்ளது.. சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெக்சார்கானா நகரில் வானத்திலிருந்து மீன்கள் விழுந்த சம்பவம் அம்மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. உண்மையிலேயே வானத்தில் மீன்கள் உள்ளனவா?

மீன்கள் வானத்திலிருந்து நேரடியாக உருவாகி விழுவதில்லை. ஏரிகள், குளங்கள், நதிகள் அல்லது கடல்களின் மேல் சக்திவாய்ந்த காற்று சுழல்கள் உருவாகும் போது, அதில் இருக்கும் சிறிய மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் காற்றுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன.

Fish Rain Fish Falling Powerful Storms Waterspout

மீன்கள் வானில்

இந்த காற்று சுழல்கள் சில நேரங்களில் மிகவும் வலிமையானதாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில்தான் மீன்கள் நீரிலிருந்து மேலே தூக்கப்பட்டு, சில தூரம் பயணம் செய்து, காற்றின் வேகம் குறைந்ததும் கீழே விழுகின்றன. இதற்கு தான் மீன் மழை என்கிறார்கள்..

சில சமயங்களில் மீன்களுடன் தவளைகள், பாம்புகள், நண்டுகள் போன்ற சின்ன சின்ன விலங்குகளும் மழையுடன் சேர்ந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன... இதுபோன்ற நிகழ்வுகளை பொதுவாக 'விலங்கு மழை' என்று அழைக்கிறார்கள். கலிபோர்னியா, வடமேற்கு சைபீரியா போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதாம்..

மீன் மழை

இந்தியாவிலும் மீன் மழை பெய்த நிகழ்வுகள் உள்ளன. 2019ம் ஆண்டு கேரளாவில் ஒரு முறை மீன் மழை பெய்தது. அதேபோல், 2021-ல் உத்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்திலும், 2022-ல் தெலங்கானா மாநிலத்தின் ஜக்தியால் நகரிலும் வானத்திலிருந்து மீன்கள் விழுந்தன. பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் பருவமழை காலத்தில் தான் நடைபெறுகின்றன.

உலகில் மிகவும் பிரபலமான மீன் மழை நிகழ்வு ஹோண்டுராஸ் நாட்டின் யோரோ நகரில் நடைபெறுகிறது. அங்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை வானத்திலிருந்து மீன்கள் விழுகின்றனவாம்.. இதற்கு "லுவியா டி பெசெஸ்" என்று பெயர்.

சின்ன சின்ன மீன்கள்

மே முதல் ஜூலை மாதங்களுக்கு இடையில் கனமழை முடிந்த பிறகு, தரை முழுவதும் சிறிய மீன்கள் காணப்படுகின்றன. அங்குள்ள மக்கள் அவற்றை சேகரித்து சமைத்து, இந்த நிகழ்வை ஒரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள்.

மீன் மழை குறித்து விஞ்ஞானிகள் சொல்வது என்ன தெரியுமா? இது ஒரு உண்மையான இயற்கை நிகழ்வே. சக்திவாய்ந்த காற்று சுழல்கள், கனமழை மற்றும் சரியான வானிலை சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே இதுபோன்ற மீன் மழை நிகழ வாய்ப்பு உள்ளது.

அமானுஷ்யம் விலகிய மர்மம்

ஏரிகள், குளங்கள், நதிகள் மற்றும் கடல்களின் மேற்பரப்பில் உருவாகும் நீர்ச்சுழல்கள் வானத்தை நோக்கி உருவாகும்போது, தண்ணீருடன் சேர்த்து அதில் இருக்கும் சிறிய மீன்கள், தவளைகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களையும் மேலே இழுத்துச் செல்கின்றன.

இந்த நீர்ச்சுழல்களின் வேகம் மிக அதிகமாக இருக்கும் போது, எடை குறைந்த மீன்கள் எளிதாக காற்றுக்குள் இழுக்கப்படுகின்றன. இந்த மீன்கள் பல மீட்டர் உயரம் வரை எடுத்துச் செல்லப்படலாம். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும் போது, அந்த மீன்கள் மழையுடன் சேர்ந்து கீழே விழுகின்றன. இதனால், வானத்திலிருந்து மீன்கள் விழுவது போல தோற்றமளிக்கிறது.

வானத்தில் இருந்து பொழியும் மீன்கள்

சிலசமயம், கனமழையின் போது நிலத்தடி நீரோடைகள், சிறிய குகைகள் அல்லது வெள்ளப்பெருக்குகள் காரணமாக மீன்கள் திடீரென மேற்பரப்பிற்கு தள்ளப்படுகின்றன. இது கூட வானத்திலிருந்து விழுவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலத்தடி நீர்நிலைகளில் வாழும் குட்டி குட்டி பார்வையற்ற மீன்கள் கனமழையின் அழுத்தத்தால் மேற்பரப்பிற்கு வரக்கூடும் என்றும் சில விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.. .

அதுமட்டுமல்ல, பெரும்பாலும் பருவமழை காலத்திலும், கடும் காற்றுடன் கூடிய கனமழை நேரங்களிலும் இந்த மீன்மழை பொழிவதுடன், பெரும்பாலும் ஒரே வகை, ஒரே அளவிலான சிறிய மீன்களாக இருப்பதும், அவை பெரும்பாலும் சேதமில்லாமல் கிடைப்பதும், இந்த நிகழ்வு இயற்கை காரணங்களால் தான் நிகழ்கிறது என்பதற்கு ஆதாரமாகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+