அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்கா விதித்த 50% வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பினால், இந்தியாவுக்கு என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள், ஆபரணங்கள், பர்னிச்சர் துறைகள் உள்ளிட்டவற்றில் நிலை என்ன என்பது என்பது பொருளாதார நிபுணர்கள் கூறிய தகவலை இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார். பின்னர் வரி விதிப்பை நிறுத்தி வைத்து பல நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியாவுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

கூடுதலாக 25 சதவிகித வரி
பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். இதன்மூலம் இந்தியா மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதில் முதலில் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக அபராதமாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரி செவ்வாய்க்கிழமை (27 ஆம் தேதி) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
$60 பில்லியன் பொருட்கள்
அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவை எந்த அளவு பாதிக்கும்..பாதிக்கப்படகூடிய துறைகள் எது என்பது? குறித்து நிபுணர்கள் கூறிய தகவல்களை பார்க்கலாம். பொருளாதார சிந்தனைக் குழுவான GTRI கூறுகையில், "அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு, சுமார் $60 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், புதிய வரி விதிப்பு வலைக்குள் சிக்கும்.
இதனால், அமெரிக்க சந்தைகளில் இந்தியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் சூழல் ஏற்படும். இது போட்டியாளர்களுடனான போட்டித்தன்மையை பாதிக்கும். இந்த பாதிப்புகள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை. ஏனெனில், அமெரிக்காவும் அதிக விலைவாசி மற்றும் மெதுவான வளர்ச்சி என பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடும்.
கடுமையான பொருளாதார இடையூறுகள்
"இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்கும் என்று நான் நினைக்கவில்லை பொருளாதார நிபுணர் எஸ்.பி. சர்மா தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி, தற்போது சுமார் $86.5 பில்லியன், 2026 நிதியாண்டுக்குள் $49.6 பில்லியனாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சீனா, வியட்நாம், மெக்சிகோ மற்றும் துருக்கி போன்ற சந்தையில் போட்டியில் உள்ள நாடுகள் உடனடியாக பயன்பெறும். ஏனெனில் அமெரிக்க நுகர்வோர்கள் மாற்று வழியை தெடுவார்கள். மேலும், இந்தியாவின் மொத்தப் பொருள் ஏற்றுமதியில் அமெரிக்கா 18% பங்கு வகிக்கிறது, வாஷிங்டனின் வரிகளின் வீழ்ச்சி குறிப்பிட்ட தொழில்களுக்குக் கடுமையான பொருளாதார இடையூறுகளை ஏற்படுத்தும்.
வேலை இழப்புகள் ஏற்படும்?
ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பர்னிச்சர் போன்ற தொழிலாளர்களை அதிகம் சார்ந்துள்ள துறைகள் கடுமையான அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் குறிப்பாக பாதிக்கப்படும் இடத்தில் உள்ளது. மேலும் பரவலான வேலை இழப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஜவுளித் தொழிற்சாலை உரிமையாளர் பத்ரேஷ் டோடியா கூறுகையில்,"உண்மையைச் சொல்லப்போனால், எந்தவொரு இறக்குமதியாளருக்கும் இவ்வளவு பெரிய வரி உயர்வை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை." "இவ்வளவு பெரிய வரி உயர்வை உள்வாங்குவது இறுதியாக நுகர்வோரைத்தான் பாதிக்கும் என்று நான் அஞ்சுகிறேன்." என்றார்.
முன்னாள் ICAI தலைவர் வேத் ஜெயின் கூறுகையில், "ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமானது." அவர் மேலும் விளக்கினார்: "நாம் இரண்டு தீமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஒன்று ரஷ்ய எண்ணெய்யை நிறுத்திவிட்டு அல்லது ரஷ்ய எண்ணெய்யை வாங்கி பொருளாதார ரீதியாகத் திறமையானவர்களாகத் தொடர்வது." என்றார்.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
சுயம்புவாக வளர்ந்த திருப்பூர்.. இப்போ இந்தியாவுக்கு பாடம் கற்று தருகிறது! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications