''எங்களால் மீண்டும் சுவாசிக்க முடிகிறது''.. தீர்ப்பை வரவேற்கும் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர்!
வாஷிங்டன்: ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
Recommended Video
'நாங்கள் தற்போது மீண்டும் சுவாசிக்க முடிகிறது. ஆனால் நீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை'' என்று அவர்கள் கூறினார்கள்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடைய வைத்தது 45 வயதான கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரணம்.

உலகை உலுக்கிய மரம்
கடந்த ஆண்டு மே 25-ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் மினபோலிஸ் நகரில் ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி டெரிக் சாவ் விசாரணைக்கு அழைத்தார். காரில் ஏற மறுத்ததால் ஜார்ஜ் பிளாய்ட்டை கீழே தள்ளிய போலீஸ் அதிகாரி டெரிக் அவரது கழுத்தில் நீண்ட நேரம் முழங்காலை வைத்து அழுத்தினார்.

கொடூரமான போலீஸ் அதிகாரி
இதனால் ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார். போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க முழுவதும் கடும் போராட்டங்கள் வெடித்தன. மேலும், உலகம் முழுவதும் இருந்தும் கடும் கண்டன குரல்கள் எழுந்து வந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

குற்றவாளி என தீர்ப்பு
இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்த போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் குற்றவாளி என்று மினசோட்டா நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. டெரிக் சாவ்வினுக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மினசோட்டா நீதிமன்றத்தின் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

ஜோ பைடன் கருத்து
"இது பகல் முழு வெளிச்சத்தில் நடந்த ஒரு கொலை என்றும் இது அமெரிக்காவில் நீதியை நோக்கிய அணிவகுப்பில் ஒரு மாபெரும் படியாக இருக்கலாம்'' என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். மினசோட்டா நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியதும் வெளியேற கூடியிருந்த ஏராளமானோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மினியாபோலிஸ் போலீஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'இந்த வழக்கில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை, நடுவர் மன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

தற்போது சுவாசிக்கிறோம்
இதேபோல் ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ''நாங்கள் தற்போது மீண்டும் சுவாசிக்க முடிகிறது. ஆனால் நீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை'' என்று அவர்கள் தெரிவித்தனர். 'இனவெறிக்கு நாம் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் இது ஒருபோதும் முடிவடையாத பிரச்சினை' என்று ஜார்ஜ் பிளாய்ட் சகோதரர் பிலோனிஸ் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications