விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணம்! விபத்துக்கு காரணம் இதுவா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்மம்!
வாஷிங்டன்: பெர்முடா முக்கோணம் பகுதியில் பயணிக்கும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகிவிடுகிறது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இதற்கு பின்னால் எந்த அமானுஷ்ய காரணமும் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் தற்போது ஒரு முக்கியமான விஷயத்தை அவர்கள் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது விமானங்களும், கப்பல்களும் மர்மமாக மாயமாவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புளோரிடா, பெர்முடா, பியூரிட்டோ ரிகோ ஆகிய மூன்று இடங்களுக்கு இடையே உள்ள பகுதிதான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முக்கோணத்தின் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போய்விடுகிறது என்று சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கையில்தான், பெர்முடா தீவின் கடலுக்கு அடியில் சுமார் 20 கிலோ மீட்டர் தடிமன் கொண்ட ஒரு மிகப்பெரிய பாறை அடுக்கை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் வேறு எங்கும் காணப்படாத இந்தப் புவியியல் அம்சம், விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கார்னகி அறிவியல் மையத்தின் நிலஅதிர்வு ஆய்வாளர்கள் இது குறித்து கூறுகையில், "பொதுவாக, கடலடி மேலோட்டைக் கடக்கும்போது, நாம் பூமிக்கு அடியில் மேன்டல் பகுதியை அடைவோம் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், பெர்முடாவின் கீழே, மேலோட்டிற்குக் கீழ், டெக்டோனிக் தட்டுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு அடுக்கு அமர்ந்திருக்கிறது" என்று கூறியுள்ளனர். பூமியை ஒரு வெங்காயம் போல கற்பனை செய்துக்கொண்டால், அதை உரிக்கும்போது மேலே உள்ள பகுதி மேலோடு என்றும், அடுத்து உள்ள பகுதி மேன்டல் என்றும், கடைசியாக உள்ள பகுதி உட்கரு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், பெர்முடா கடல் பகுதியில், இந்த மூன்று அடுக்குகள் இல்லாமல் நான்காவதாக ஒரு அடுக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவே விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. வழக்கமாக எரிமலைகள் ஏதேனும் இருந்தால் இப்படியான அடுக்குகள் உருவாகியிருக்க கூடும். ஆனால், கடந்த 3 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இங்கு எந்த எரிமலையும் இல்லை. இப்படி இருக்கையில், இந்த பாறை அடுக்கு எப்படி உருவாகியிருக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது.
இதற்கு சில காரணங்களையும் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முன்வைத்திருக்கின்றன. முதல் காரணம், நமக்கு தெரிந்து 3 கோடி ஆண்டுகளுக்கான தரவுகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு எரிமலை இருந்திருக்கலாம். அது நெருப்பு குழம்பை கக்கி, பாறை திட்டுக்களை உருவாக்கியிருக்கலாம். இரண்டாவது காரணம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா எனும் பெரும் கண்டம் பிரிந்தது. அந்த நேரத்தில் இந்த பாறை உருவாகியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அதேபோல இதற்கு முன்னர் பெர்முடா முக்கோணம் பகுதியில் ஏற்பட்ட விபத்துகளுக்காக காரணங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த பாறைக்கும், பெர்முடா முக்கோணத்தில் பயணிக்கும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூழ்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications