சுந்தர் பிச்சைக்கு அடித்த மெகா ஜாக்பாட்! சம்பளம் அதிரடியாக உயர்த்திய கூகுள்.. எவ்வளவு தெரியுமா?
வாஷிங்டன்: கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் சம்பளம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான சம்பளம் ரூ.63,00,00,00,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் அதிகம் வருமானம் ஈட்டும் தலைமை செயல் அதிகரியாக உள்ள சுந்தர் பிச்சை, இந்த வருவாய் உயர்வு மூலமாக தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்து இருக்கிறார்.
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இதன் தாய் நிறுவனமாக ஆல்பாபெட் இன்க் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார்.

அதிக சம்பளம் பெறுபவர்
உலக அளவில் அதிகம் சம்பளம் பெறுபவர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி சுந்தர் பிச்சையின் சம்பளம் வருடத்திற்கு 1,800 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சுந்தர் பிச்சையின் சம்பளம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சுந்தர் பிச்சையின் மூன்று ஆண்டு சம்பளம் சுமார் 692 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 63,618 கோடி) உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகரியாக உள்ளார். சுந்தர் பிச்சையின் இந்த ஊதியத் தொகுப்பில் பெரும்பாலான பகுதி,126 மில்லியன் டாலர் மதிப்புள்ள செயல்திறன் அடிப்படையிலான பங்குகள் மூலம் வருகிறது. இந்தத் தொகை இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பல மடங்கு உயர்ந்த சம்பளம்
இந்த பங்குகள் ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குதாரர் வருவாய், எஸ்&பி 100 புள்ளிகளுடன் ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன் இலக்கை (target) எட்டினால் , இந்த PSUs-களின் மதிப்பு 252 மில்லியன் டாலராக இரட்டிப்பு அடையும். மாறாக, எட்டப்படாவிட்டால், எந்த வருமானமும் கிடைக்காமல் போகும்.
இத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பங்குகள் வாயிலாக 84 மில்லியன் டாலர்கள் மற்றும் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் சம்பளமும் சுந்தர் பிச்சைக்கு கிடைக்கும். இதுபோக மேலும் சில தனது நிறுவனங்களிடம் உள்ள பங்கு தொகைகளும் சுந்தர் பிச்சைக்கு கிடைக்க உள்ளது. இதனால், சுந்தர் பிச்சையின் வருமானம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் பள்ளி படிப்பு
53 வயதான சுந்தர் பிச்சை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். மேல் படிப்பை ஐஐடி கராக்பூர் மற்றும் அமெரிக்காவில் பயின்றார். கூகுள் நிறுவனத்தில் 2004-ல் தனது கேரியரை தொடங்கிய சுந்தர் பிச்சை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றது முதல், சுந்தர் பிச்சை கூகுளின் சந்தை மதிப்பை சுமார் ஏழு மடங்கு அதிகரித்து, 535 பில்லியன் டாலரில் இருந்து 3.6 டிரில்லியன் டாலராக உயர்த்தியுள்ளார். கடந்த ஜனவரியில் இது 4 டிரில்லியன் டாலரையும் எட்டியது. கூகுள் பிச்சை டீம் உருவாக்கிய இந்த குரோம், கூகுளின் வளர்ச்சியை பலமடங்கு அதிகரித்தது.
கூகுளின் உயரிய பதவி
இதையடுத்து, ஆண்ட்ராய்டு பிரிவுக்குத் தலைமை தாங்கி, கூகுளின் உயரிய பதவிக்கு உயர்ந்தார். மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா 2025 நிதி ஆண்டில் 96.5 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளார். அத போல ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் 74.3 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications