H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களை.. புதிய கட்டணம் பாதிக்காது! அமெரிக்கா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை பார்க்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் H-1B விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தியிருந்தது. இதனையடுத்து H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க நிறுவனங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இந்த கட்டணம் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்று அமெரிக்க அரசு தெரிவித்திருக்கிறது.

அதாவது, இது ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம். இது ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும் கட்டணம் அல்ல. ஒரு விசா விண்ணப்பத்திற்கு மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும். ஏற்கெனவே H-1B விசா வைத்திருப்பவர்கள், தற்போது வெளிநாட்டில் இருந்தால், மீண்டும் நாட்டிற்குள் நுழைய $100,000 கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

H1B visa Trump US

H-1B விசா வைத்திருப்பவர்கள் வழக்கமாக வெளிநாடு சென்று வருவது போலவே, இந்த அறிவிப்பால் எந்தவிதத் தடையும் இல்லாமல் பயணிக்கலாம். இந்தக் கட்டணம் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், விசா புதுப்பித்தலுக்கோ அல்லது தற்போதைய விசா வைத்திருப்பவர்களுக்கோ பொருந்தாது. இந்தக் கட்டணம் அடுத்த H-1B லாட்டரி சுழற்சியில் இருந்துதான் நடைமுறைக்கு வரும் என்று மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருக்கிறார்.

H-1B லாட்டரி சுழற்சி முறை என்றால் என்ன?

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் H-1B விசாக்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் குவியும் போது, அமெரிக்க குடியுரிமை சேவை அதிகாரிகள் கணினிமயமாக்கப்பட்ட லாட்டரி முறையை பயன்படுத்தி விண்ணப்பங்களுக்கு அனுமதியை கொடுப்பார்கள். இந்த கணினிமயமாக்கப்பட்ட லாட்டரி முறைதாள் எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தீர்மானிக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.

எனவே இப்பொழுது நடைபெறும் விசா விண்ணப்பங்கள் சரிபார்ப்பு மற்றும் அனுமதி நடைமுறைக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.88 லட்சம்) கட்டணம் என்பது பொருந்தாது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மட்டுமே இது பொருந்தும் என்று அமெரிக்க அரசு விளக்கமளித்திருக்கிறது.

முன்னதாக அமெரிக்க டெக் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஜேபி மோர்கன் உள்ளிட்ட நிறுவனங்கள் H-1B விசா வைத்திருக்கும் தங்களது பணியாளர்கள் வெளிநாடுகளில் இருந்தால் உடனடியாக அதாவது 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவுக்குள் வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த விசாவை அதிக அளவில் இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதால், விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த பணியாளர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு போக முயற்சியை மேற்கொண்டனர்.

இதனால் டெல்லி - அமெரிக்கா விமான கட்டணம் கடுமையாக உயர்ந்தது. ஆனால், இப்போது ஏற்கனவே விசாவை வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தி. இருந்தது வழக்கமாக H-1B விசாவுக்கான கட்டணத்தை அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களே வழங்கும். எனவேதான் நிறுவுனங்கள் அவசர அவசரமாக பணியாளர்களை நாடு திரும்ப உத்தரவிட்டிருநு்தது. H-1B விசா அமெரிக்காவில் மூன்றாண்டு காலம் வரை செல்லுபடி ஆகும். அதேபோல அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+