"H-1B விசா.." திடீரென கைவிரித்த அமெரிக்கா.. பரிதவிக்கும் பல நூறு இந்தியர்கள்! வேலையிழக்கும் ஆபத்து
வாஷிங்டன்: அமெரிக்க அரசு விசா விதிகளில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதனால் விசா வாங்குவதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே விசா புதுப்பிக்கத் தாயகம் திரும்பிய பல நூறு இந்தியர்கள், விசாவை புதுப்பிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்களின் விசா நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து அதிகப்படியானோர் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஐடி துறைகளில் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் ஹெச்-1பி விசாவில் அதிகம் செல்கிறார்கள். இப்போது H-1B விசா வைத்திருப்பவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்தான்.

விசா புதுப்பிப்பு
பொதுவாக அப்படி அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் வேலை பார்ப்போர் தங்கள் விசா காலம் முடியும்போது இந்தியாவுக்கு வருவார்கள். இங்கு விசாவை புதுப்பித்துக் கொண்டு மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்வார்கள். அப்படித் தங்கள் விசாவை புதுப்பிக்க வந்த பல நூறு இந்தியர்கள் இப்போது இங்குச் சிக்கித் தவிக்கிறார்கள். டிசம்பர் 15 முதல் 26 வரையிலான தேதிகளில் விசா நேர்காணல்கள் திடீரென அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஒத்திவைப்பு என்றால் அடுத்தாண்டு தொடக்கத்திற்கு மாற்றப்பட்டு இருந்தால் ஓகே.. ஆனால், இவர்களின் நேர்காணல் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் இந்தியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களும் கூட தங்கள் ஊழியர்கள் மீண்டும் எப்போது பணிக்குச் சேர்வார்கள் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளன.
குழப்பம்
இது தொடர்பாக அமெரிக்கக் குடிவரவு வழக்கறிஞர் வீணா விஜய் ஆனந்த் கூறுகையில், "இதுவரை இவ்வளவு தூரம் நேர்காணல்களில் குழப்பம் ஏற்பட்டதே இல்லை. இதனால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை எப்படிச் சரி செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. இதற்கு அவர்கள் ஒரு திட்டம் வைத்திருப்பது போலவும் தெரியவில்லை" என்றார்.
வேலை போகும் ஆபத்து
அப்படித் தான் அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்படியே விசாவையும் புதுப்பித்துக் கொண்டு செல்வதே அவரது திட்டம். டிசம்பர் 17, 23 நாட்களில் அவருக்கு நேர்காணல் இருந்தது. இருப்பினும், அவரது நேர்காணல் எதிர்பாராத விதமாக ரத்தாகிவிட்டது. இதனால் எவ்வளவு காலம் காத்திருக்கும் என்று தெரியாமல் அவர் குழப்பத்தில் இருக்கிறார்.
அவர் மட்டுமில்லை. பல நூறு இந்தியர்களுக்கு இதே நிலைமை தான். புதிதாக அமெரிக்காவில் வேலை கிடைத்து, அங்குச் செல்ல இருந்தவர்களும் இதனால் போக முடியவில்லை. இதனால் அவர்களும் வேலையை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விளக்கம்
அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போரின் சமூக வலைத்தளக் கணக்குகளை ஆய்வு செய்து, அதன் பிறகு விசா வழங்கும் நடைமுறையை டிரம்ப் கொண்டு வந்தார். விசா கோரி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நபரின் சமூக வலைத்தளப் பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்குச் சிக்கலை ஏற்படுத்தும் நபருக்கு விசா வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்தச் சோதனை கட்டாயமாவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
அறிவுறுத்தல்
இப்படிக் குழப்பமான சூழல் இருப்பதால் முன்னணி அமெரிக்க நிறுவனங்களான கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. விசா புதுப்பிக்க ஒரு ஆண்டு வரை தாமதம் ஏற்படுகிறது என்பதால் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications