முனகல் சத்தம்.. சொட்டு சொட்டா ரத்தம்.. எட்டிப்பார்த்து அதிர்ந்த டீம்.. இதயத்தை நொறுங்க செய்த "சிசு"

இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் வீடியோ ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், இயற்கையை சகித்து கொண்டிருக்கிறார்கள்.. துடிதுடித்து உயிரிழந்த உயிர்களை கண்டு கதறி கொண்டிருக்கிறார்கள்.

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது... இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தில், சீட்டு கட்டுகள் போல், வீடுகளும், கட்டிடங்களும் பொலபொலவென சரிந்து விழுந்தன.. இந்த இடிபாடுகளில், விழுந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

உலுக்கிடுச்சு

உலுக்கிடுச்சு

இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலரது உடல்களும் மீட்கப்படும் துயரங்களும் அரங்கேறி வருகின்றன. .. என்ன நடந்தது என்று தெரியாமலேயே அந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் நசுங்கி இறந்தவர்கள் ஏராளம்.. இதனை விட சோகம் என்னவென்றால், இதில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள்தான்.. அதிலும் ஏராளமான குழந்தைகள், தங்கள் பெற்றோரின் அரவணைப்புக்குள்ளேயே இறந்து கிடந்த காட்சிகள், இதயத்தையே நொறுக்கிவிட்டது.. இந்த துயரத்திற்கு மத்தியிலும் இடிபாடுகளுக்குள் இடையில் இருந்து, பச்சிளம் பெண் குழந்தையை மீட்பு பணியாளர்கள் உயிருடன் மீட்டனர்..

சொட்டு சொட்டாக ரத்தம்

சொட்டு சொட்டாக ரத்தம்

அதற்கு பிறகு, அந்த பெற்றோரை தேடியபோது, அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருந்தனர். நிலநடுக்கத்திற்கு பிறகு இடிபாடுகளுக்குள் இந்தக் குழந்தை பிறந்து இருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.. சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இங்கே பல நோயாளிகள் இடிபாடுகளில் சிக்கி தவிப்பதாகவும் மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைக்கவும், மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.. நவீன கருவிகள் மூலம் உயிரோடு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் குழுவினர் முதலில் ஈடுபட்டனர்.

முனங்கல் சத்தம்

முனங்கல் சத்தம்

அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து திடீரென ரத்தம் சொட்டுவதை அவர்கள் கவனித்தனர்.. உடனே அந்த பகுதியில் இருந்த இடிபாடுகளை நீக்கி அதன் அடியில் யாராவது இருக்கிறார்களா? என்று மீட்பு குழுவினர் தேடினர்.. அங்கு இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை மெதுவாக வெளியே எடுத்தபோதுதான், அவருக்கு பக்கத்திலேயே அந்த பச்சிளங்குழந்தை லேசான காயங்களுடன் முனங்கி கொண்டிருப்பதை பார்த்தனர்.. அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் தாயுடன் இணைந்தே கிடந்ததை பார்த்து மலைத்து மீட்பு குழுவினர் ஒரு வினாடி அதிர்ந்தே போனார்கள்.

தொப்புள் கொடி

தொப்புள் கொடி

அடுத்த செகண்டே சுதாரித்து கொண்டு அந்த பச்சிளங்குழந்தையை, மெதுவாக கைகளில் அள்ளி எடுத்து மார்போடு அணைத்து கொண்டே வெளியே மீட்டு வந்தனர்...இது பற்றி மீட்பு குழுவினர் சொல்லும்போது, "குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை.. அவரது விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது... அவர் சிரியாவின் அலப்போநகரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்தவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.. இதுபற்றி விசாரித்து கொண்டிருக்கிறோம்" என்றனர்..

உலுக்கும் வீடியோ

உலுக்கும் வீடியோ

தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அந்த குழந்தைக்கு தீவிரமான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. குழந்தை மீட்பு நிகழ்வு குறித்த வீடியோவையும், மீட்பு குழுவினருடன் சென்றவர்கள் வீடியோ எடுத்து, இணையத்தில் பதிவிட்டுவிடவும், அதை காட்சி பொதுமக்களை உலுக்கி எடுத்து விட்டது. இடிபாடுகளுக்குள் குழந்தை மீட்கப்பட்டு விட்டாலும், பெற்ற தாய் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடியே உயிரைவிட்ட போட்டோக்களும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+